பார்க்க அப்படியே இருக்காரே.. மக்கள் மனதை உலுக்கிய.. கேப்டன் விஜயகாந்தின் கடைசி புகைப்படம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் கடைசி புகைப்படம் இணையத்தில் பரவி மக்கள் மனதை உலுக்கி உள்ளது.

தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காலை காலமானார். கடந்த சில வாரங்களுக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போதே அவரின் உடல்நிலை மோசமானதாக செய்திகள் வந்தன.

அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ரத்த கொதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடலநிலை மோசமாகி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் அவரின் உடல்நிலை அதன்பின் சரியாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் கூட விஜயகாந்த் கலந்து கொண்டார்.

The last picture of DMDK Founder Vijayakanth ahead of his last rituals

இப்போது மரணத்திற்கு என்ன காரணம்?: தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நிலைக்கு என்ன ஆனது? அவரின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு ஏற்கனவே இதயம் தொடர்பான, நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் இருந்துள்ளன.

அதை தொடர்ந்து கொரோனா ஏற்பட்டு உள்ளது. நேற்று கொரோனா ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மரணத்தின் பின் அது பாசிட்டிவ் ஆக இல்லை. இதனால் அவரின் மரணத்திற்கு கொரோனா காரணம் என்று கூற முடியாது. மரணத்திற்கு பின் செய்யப்பட்ட சோதனையில் அவர் கொரோனா பாசிட்டிவ் இல்லை.

( விஜயகாந்த் மரணம் பற்றி கேட்டதும்.. ஸ்டாலின் சட்டென எடுத்த முடிவு! இதுதான் நாகரீகம்! நெகிழ்ந்த மக்கள்)

விஜயகாந்த் நுரையீரல் அழற்சி (pneumonia) காரணமாகவே மரணம் அடைந்து உள்ளார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிகாலையில் நுரையீரல் அழற்சி தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். அவருக்கு சுத்தமாக மூச்சு விடும் திறன் இல்லாமல் போய் உள்ளது. கொரோனா + நாட்பட்ட நுரையீரல் பாதிப்பு + நுரையீரல் அழற்சி மூன்றும் சேர்ந்துதான் அவரின் உடல்நிலையை மோசமாக்கி உள்ளது.

இந்த நிலையில் மரணத்திற்கு பின் கொரோனா பாசிட்டிவ் இல்லை என்பதால்.. விஜயகாந்த் நுரையீரல் அழற்சி (pneumonia) காரணமாகவே மரணம் அடைந்து உள்ளார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் அவர் இன்று காலை 28 டிசம்பர் 2023 காலமானார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

The last picture of DMDK Founder Vijayakanth ahead of his last rituals

பரவும் போட்டோ; தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் கடைசி புகைப்படம் இணையத்தில் பரவி மக்கள் மனதை உலுக்கி உள்ளது. பார்க்க அப்படியே கல் மாதிரி.. எப்போதும் போல திடகாத்திரமாக அவர் இருப்பது போல இருக்கும் புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. பார்க்க அப்படியே இருக்கிறாரே என்று நெட்டிசன்கள் பலரும் அந்த போட்டோவில் கமெண்ட் செய்து வருகின்றனர். பல படங்களில் நடித்தவரின் கடைசி புகைப்படம் மக்கள் மனதை உலுக்கி உள்ளது. பலரும் இதை பகிர்ந்து.. விஜயகாந்த் அப்படியே இருக்கிறார்.. பாருங்கள்.. தூங்குவது போலத்தான் இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.

நாளை விஜயகாந்த் உடல் மக்கள் பார்வைக்கு ராஜாஜி ஹாலில் வைக்கப்பட உள்ளது. அதன்பின் கேப்டன் விஜயகாந்த் உடல் முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+