இதயத்தை நொறுக்குவதாக உள்ளது.. மன்னிக்கவே முடியாதது.. நண்பன் விஜய்க்காக நடிகர் சூர்யா பதிவு
சென்னை: பல ஆண்டுகால உழைப்பு, கோடிக்கணக்கான முதலீடு, மற்றும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் என அனைத்தும் ஒரு சில நிமிட 'லீக்' செயலால் கேள்விக்குறியாக்கப்படுவது மிகப்பெரிய அநீதி.. அது தான் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு நடந்திருப்பதாக மொத்த திரையுலகமும் கண்டனம் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் நடிகர் சூர்யா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த மூன்று மாதங்களாக வெளியாகாமல் முடங்கி உள்ளது. சென்சார் பிரச்சனை காரணம் படம் இன்று வரை வெளியாகவில்லை..இந்த படம் தேர்தல் முடிந்த உடன் வெளியிடுவதற்காக தயாராக இருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஹெச்டி தரத்தில் எடிட்டிங் வெர்சன் படமாக அப்படியே ஜனநாயகன் திரைப்படங்களில் இணையதளங்களில் வெளியானது.

சுமார் 500 கோடி மதிப்பில் எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தை பலரும் ஆன்லைனில் டவுன்லோடு செய்துவிட்டார்கள். இந்த படத்தை தயாரித்த நிறுவனம் கலங்கி நிற்கிறது. நடிகர் விஜய் இதுவரை ஆன்லைன் லீக் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் அவரது தவெக நிர்வாகிகள் திமுக மற்றும் பாஜகமீது குற்றம்சாட்டுகிறார்கள்.
இதனிடையே ஜனநாயகன் திரைப்படம் ஆன்லைனில் லீக் ஆன விவகாரம் தொடர்பாக பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யாவும் எக்ஸ் தளத்தில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறுகையில், "இதயத்தை நொறுக்குவதாகவும், அநீதியானதுமாகவும் இருக்கிறது - ஒரு முழு குழுவின் உழைப்பும் ஆர்வமும் இப்படி வீணடிக்கப்பட்டுவிட்டதே. உங்கள் அனைவரிடமும் நேர்மையுடன் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், தயவுசெய்து அந்தத் திரைப்படத்தை இங்கே பார்க்கவோ, பகிரவோ அல்லது அதைப் பற்றி விவாதிக்கவோ வேண்டாம். அவர்களின் உழைப்பிற்கு மதிப்பளியுங்கள். எனது நண்பர்களின் பக்கம் நான் நிற்கிறேன், இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது மன்னிக்க முடியாத ஒன்று!" என்று சூர்யா கூறியுள்ளார்.
வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் குரூப்களில் வரும் லிங்குகளைப் பார்க்காமலும், மற்றவர்களுக்குப் பகிராமலும் இருப்பது நல்லது. படம் திரையரங்குகளில் இருக்கும்போது அங்கேயோ அல்லது ஓடிடி தளங்களில் வரும்போதோ பார்ப்பதுதான் படக்குழுவினருக்கு நாம் தரும் உண்மையான மரியாதையாக இருக்கும். "ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது பலரின் கனவு. சினிமா மீதான காதலும், உழைப்பிற்கு மதிப்பளிக்கும் குணமும் கொண்ட ரசிகர்கள் நிச்சயம் சூர்யாவின் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்வார்கள். திருட்டுத்தனமாகப் படம் பார்ப்பது என்பது ஒரு படைப்பாளியின் பசியைத் திருடுவதற்குச் சமம் ஆகும்.












Click it and Unblock the Notifications