வேலையில்லாததால் கள்ளசாராயம்..கள்ளக்குறிச்சி வழக்கை தாமாக விசாரிக்கும் உயர்நீதிமன்றம்! முக்கிய ஆர்டர்
சென்னை: தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சியில் ஜூன் 18-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், தமிழக தலைமைச் செயலாளர், மத்திய, மாநில பழங்குடியின நலத்துறை, தமிழக டி.ஜி.பி., சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும், எஸ்.பி.க்கள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகுளம் அருகே கடந்த சில நாட்களாக கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 18ஆம் அந்த பகுதியைச் சேர்ந்த பிரவீன், சுரேஷ், ஜெகதீசன் உள்ளிட்ட பலர் அங்கு கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர்.

அவர்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு மேல் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்தனர். இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து அவர்களுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் 65க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலருக்கு பார்வை பாதிப்பு, உடல்நலக் குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. உடல் நலனுக்கு கேடு விளைக்கும் மெத்தனாலை தொழிற்சாலைகள் வாங்கி அவற்றை கள்ளச்சாராயத்தில் கலந்து விற்பனை செய்யப்பட்டதும், அதனை வாங்கி குடித்தவர்கள் உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதே போல கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல்துறையினர் ஒட்டுமொத்தமாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 21 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் சிபிஐ விசாரணை கோரி அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சுற்றி இருக்கும் கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு அங்கிருந்து வடமாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் சிபிசிஐடி போலீசாரும் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் மற்றும் அது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி அளித்த தொலைக்காட்சி நேர்காணல் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை எடுத்துக் கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் இல்லாததால் அவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் நிலை உள்ளது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், கல்வராயன் மலைப்பகுதி மக்களின் பொருளாதார சமூக மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாகவும் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தமிழக தலைமை செயலாளர், மத்திய, மாநில பழங்குடியினர் நலத்துறை, தமிழக டிஜிபி, சேலம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள், மற்றும் எஸ்பிக்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications