மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு
சென்னை: 'சென்னை வெதர்மேன்' பகிர்ந்துள்ள பதிவில், பொதுவாக மார்ச் மாதம் சென்னைக்கு மிகவும் வறட்சியான காலம். இந்த மாதத்தின் சராசரி மழையே வெறும் 3.5 மி.மீ தான். ஆனால், நேற்று இரவு சென்னை முழுவதும் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக மேடவாக்கம், பள்ளிக்கரணை போன்ற தென் சென்னை பகுதிகளில் சுமார் 90 மி.மீ மழை பதிவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.
'சென்னை வெதர்மேன்' பகிர்ந்துள்ள எக்ஸ் தள பதிவில், "பொதுவாக மார்ச் மாதம் சென்னைக்கு மிகவும் வறட்சியான காலம். இந்த மாதத்தின் சராசரி மழையே வெறும் 3.5 மி.மீ தான். ஆனால், நேற்று இரவு சென்னை முழுவதும் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக மேடவாக்கம், பள்ளிக்கரணை போன்ற தென் சென்னை பகுதிகளில் சுமார் 90 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது இந்த காலக்கட்டத்தில் மிகவும் அரிதான மற்றும் அசாதாரணமான ஒன்று!

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்தே ஒவ்வொரு மாதமும் வானிலை நமக்குச் சாதகமாகவே இருந்து வருகிறது. வறண்ட கோடை காலத்திற்குப் பதிலாக, அவ்வப்போது பெய்யும் இந்த மழை சென்னையை குளிர்வித்து வருகிறது.
சென்னை மட்டுமல்லாது கோவை, பெங்களூரு மற்றும் உள் மாவட்டங்களிலும் பலத்த இடிமழை பெய்துள்ளது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் (Hailstorms) பதிவாகியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம்: மேற்கத்திய காற்றழுத்தத் தாழ்வு நிலை வழக்கத்திற்கு மாறாகத் தெற்கு நோக்கி இறங்கியுள்ளது. பகலில் நிலவும் அதிக வெப்பம் , இந்த ஈரப்பதமான காற்றுடன் இணைந்து வளிமண்டலத்தில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. இதுதான் பரவலான இடிமின்னல் மேகங்கள் உருவாகக் காரணமாக அமைந்தது.
இன்றைய நிலவரம்
இன்றும் வானிலை இதேபோல் சாதகமாகவே இருக்கும். குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெறும் வெயிலைப் பற்றியே பேசிக்கொண்டிருந்த நமக்கு, இந்த மழை ஒரு பெரிய மாற்றத்தைத் தந்துள்ளது. வரும் மாதங்களிலும் வெயிலைப் பற்றி மட்டும் பேசாமல், இது போன்ற மழைச் செய்திகளைப் பற்றிப் பேசும் சூழல் அமையும் என நம்புவோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்
வானிலை மையம்
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "மன்னார் வளைகுடா முதல் தென் கர்நாடகத்தின் உள்பகுதி வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மார்ச் 19) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 20-ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 21, 22-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23, 24-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இன்று முதல் மார்ச் 22-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை குறைவாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளத்தில் 9 செ.மீ, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் 8 செ.மீ, மழை பதிவாகியுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன














Click it and Unblock the Notifications