Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேசிய கல்விக்கொள்கை மஸ்ட்.. மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் ‛செக்’.. கொந்தளித்த சிபிஎம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆசிரியர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் (வளரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) திட்டத்தை அறிவித்தார். இந்நிலையில் இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஆனால் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகள் மட்டுமே இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும். அதாவது இந்த குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டுமே மத்திய அரசு நிதியளிக்கும் என்று கூறியிருந்தது.

இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

 பிஎம் ஸ்ரீ பள்ளிகள்

பிஎம் ஸ்ரீ பள்ளிகள்

ஆசிரியர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி, வளரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள் (பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்) எனும் திட்டத்தை அறிவித்தார். இதனையடுத்து நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், நாடு முழுவதும் 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படும். இதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.27,360 கோடி செலவிடப்படும். இதில் ரூ.18,128 கோடி மத்திய அரசு தரப்பில் கொடுக்கப்படும்.

 எதிர்ப்பு

எதிர்ப்பு

இந்நிலையில், இந்த திட்டம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டம் தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டம் சட்டவிரோதமானது, பாரபட்சமானது, கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கூறியதாவது, "செப்.5 ஆம் தேதி, ஆசிரியர் தினத்தன்று பள்ளிகளை மேம்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை பிரதமரின் பெயரில் ஒன்றிய அரசு அறிவித்தது.

சம பங்கு

சம பங்கு

இதன் மொத்த மதிப்பு சுமார் 27 ஆயிரம் கோடிகள். அதில் பாதியை மட்டுமே ஒன்றிய அரசு கொடுக்கும். மீதியை மாநிலங்கள் செலவு செய்து பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். ஆனால் இந்த நிதியினை புதிய கல்விக் கொள்கையை அமலாக்கும் மாநிலங்களுக்கு தான் வழங்குவோம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் வரி வருவாய் மாநிலங்களில் இருந்துதான் வருகின்றது. கல்வி குறித்த முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் மாநிலங்களுக்கும் சம பங்கு உள்ளது.

கண்டனம்

கண்டனம்

கல்வி என்பது பொது பட்டியலில் உள்ளது. இந்த இரண்டையுமே மதிக்காமல் அறிவிக்கப்பட்டிருப்பதுதான் புதிய திட்டம். பாஜக திணிக்க நினைக்கும் கல்விக் கொள்கையை ஏற்கும் பாஜக மாநிலங்களுக்கு மட்டுமே ஒன்றிய அரசின் நிதி என்ற அநியாயத்தை கொள்கையாக அறிவிக்கிறார்கள். இது சட்டவிரோதமானது, பாரபட்சமானது, கண்டனத்திற்குரியது" என்று கூறியுள்ளார்.

பேட்டி

பேட்டி

மேலும் oneindia Tamilக்கு அவர் அளித்த பேட்டியில், "மாநிலங்களில் உள்ள பள்ளிகளைதான் மத்திய அரசு மேம்படுத்த முடியும். தற்போது அறிவித்துள்ள திட்டத்தின்படி பார்த்தால் எல்லா மாநிலங்களுக்கும் சமமான நிதி பங்களிப்பு வழங்கப்படுவது குறித்து கேள்வியெழுகிறது. மேலும், கல்வி பொதுப்பட்டியளில் உள்ளதால் மாநிலங்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டிருக்க வேண்டும். அதேவேளையில் தற்போது தேசிய கல்விக்கொள்கையை முன்வைத்து மத்திய அரசு நிதி ஒதுக்கி இருப்பது இந்த கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ப்ளாக்மெயில் செய்வதை போன்று உள்ளது. கல்வியில் மாணவர்களின் நலன் அடங்கியுள்ளதால் அதனுடன் விளையாடக்கூடாது என்பதுதான் சிபிஎம்-ன் நிலைப்பாடு" என்று கூறியுள்ளார்.

18 லட்சம் மாணவர்கள்

18 லட்சம் மாணவர்கள்

மத்திய அரசின் இந்த புதிய திட்டத்தின் மூலம், நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஒரு வார்டில் அதிகபட்சம் இரண்டு பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும். அதேபோல இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+