2 மணிநேரம் நடந்த சந்திப்பு.. ரஜினி வைத்த விருந்து.. சீமான் பேசியது என்ன? ரவீந்திரன் விளக்கம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சீமான் சந்திப்பின் போது என்ன நடந்தது? இருவரும் என்ன பேசினார்கள் என்பது பற்றி அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி மிக விரிவான பேட்டியை அளித்துள்ளார்.
தமிழக அரசியல் வட்டாரத்தில் சீமான் நேற்று ரஜினிகாந்த்தைச் சந்தித்துப் பேசியதுதான் ஹாட் டாப்பிக் ஆக வலம் வர தொடங்கி இருக்கிறது. ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவிக்க இருந்தபோது அவரை மிகக் கடுமையாக விமர்சித்தார் சீமான். அவர் தமிழ்நாட்டில் நடிக்கலாம். ஆனால், எங்களை ஆள வேண்டும் என நினைக்கக்கூடாது. அப்படி அவர் அரசியல் கட்சி தொடங்கினால் கடுமையாக அவரை எதிர்ப்போம் என்று சீமான் பேசி இருந்தார். ரஜினி அரசியலை எதிர்த்த சீமான், நடிகர் கமல் கட்சி தொடங்கிய போது அவரை ஆதரித்தார். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைஞன் என்றும் கூறியிருந்தார்.

இப்போது விஜய் அரசியல் கட்சி தொடங்கி அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் எனப் பேச்சு எழுந்த நிலையில், திடீரென்று மோடி ஆதரவாளரான ரஜினியை சீமான் சந்தித்துப் பேசி இருக்கிறார். ஆகவே, அது பற்றிப் பல வியூகங்கள் வெளியே கசியத் தொடங்கி உள்ளன. இந்தச் சந்திப்பில் ரவீந்திரன் துரைசாமியும் உடன் இருந்துள்ளார். அவர்தான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில் ரஜினி சந்திப்பின் போது சீமான் என்ன பேசினார்? அங்கே நடந்தது என்ன என்பது பற்றி விளக்கம் அளித்திருக்கிறார் ரவீந்திரன் துரைசாமி. அவர் அளித்துள்ள பேட்டியில், "சினிமா துறையில் மூத்த நடிகர் ரஜினியைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற வேண்டும் என்பது சீமானின் ஆசையாக இருந்தது. ஆனால், அவரது பிறந்தநாள் போது ரஜினி படப்பிடிப்பிலிருந்தார். அதேபோல் சீமான் அப்போது பயணத்திலிருந்தார். அந்தச் சந்திப்பு திட்டமிட்டபடி நடக்காமல் போய்விட்டது. நேற்று ரஜினியும் சீமானும் சந்திப்பதற்காகக் கால அவகாசம் இருந்தது. ஆகவே, ரஜினி அழைத்தார். அதனடிப்படையில் சீமான் சந்திப்பு நடந்தது.
இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்புதான். சுமார் இரண்டரை மணிநேரம் பேசினார்கள். அதில் பல விசயங்கள் இருந்தன. நானும் அவர்கள் கூடவே இருந்தேன். அதில் முக்கால் மணி நேரம் இருவரும் தனியாகப் பேசிக் கொண்டனர். ரஜினி முற்றாக அரசியல் வாழ்க்கையிலிருந்து 2022இல் விலகினார். அதன்பின் பலரும் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? எந்த அணியை ஆதரிக்கவேண்டும்? என ஒரு அறிக்கை வெளியிடச் சொல்லி பலரும் ரஜினியை வற்புறுத்தினார்கள். அப்போது நான் அவரிடம், "நீங்கள் இப்போது பொதுவான மனிதர். எனவே எந்தக் கட்சிக்கு ஆதரவாக அறிக்கை விடுவது நல்லது அல்ல" என்று சொன்னேன். அவரும் அதை ஏற்றார்.

கடந்த 2024இல் மோடியை ஆதரித்து மும்பையில் நடக்கும் ஒரு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுங்கள் என அவர் தாதா சாஹேப் பால்கே விருது விழா பெற வந்த போது கேட்டுக் கொண்டேன். அப்போது, '2021இல் அனைவருக்கும் பொதுவானவராக இருங்கள் என்று சொன்னீர்கள். இப்போது மோடிக்கு ஆதரவாக அறிக்கை விடச் சொல்கிறீர்கள். நான் பொதுவான நபராக இருந்து விடுகிறேன். என்னை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம்'என்றார். அதை நானும் ஏற்றுக் கொண்டேன்.
சீமானின் சந்திப்பில் விஜய் அரசியல் பற்றி எதையும் பேசவில்லை. ரஜினி அரசியலுக்கு வராததால், அவரது முகத்தில் ஒரு பொலிவும் தெளிவும் உள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். அது உங்கள் முகத்தில் வெளிப்படுகிறது. அரசியலுக்கு வந்திருந்தால் தாக்குப்பிடிப்பது கஷ்டம். நாங்கள் அரசியல் களத்தில் காட்டான் போலக் கிடந்து கஷ்டப்படுகிறோம். நீங்கள் விலகியது நல்லது என்று சொல்லி ரஜினியை சீமான் பாராட்டிப் பேசினார்.
அதற்கு ரஜினி, 'என்னைத் தூக்கிவிட இங்கு யாரும் இல்லை. அதைப்போல் உங்களைத் தூக்கிவிட யாரும் இல்லை. அதை எல்லாம் கடந்து நீங்கள் பெரிதாக வளர்ந்துவிட்டீர்கள்'என்று சீமானிடம் ரஜினி சொன்னார். அப்போது வரும் 2026 தேர்தலில் தனித்துத்தான் போட்டியிட உள்ளதாக சீமான் சொன்னார். ரஜினி அதிகம் அரசியல் பேசவில்லை. அவர் சீமான் சொன்னதை முழுக்க அப்படியே பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்தார்.
ரஜினிக்கும் சீமானுக்கு பொதுவான நண்பர்களான பாரதிராஜா, சீமான், இளையராஜா எனப் பலரைப் பற்றி பொதுவான விசயங்களை சீமான் பேசினார். ரஜினி நடிப்பில் வெளியான 'முள்ளும் மலரும்' படத்தில் தனக்குப் பிடித்த பல காட்சிகளை சீமான் இந்தச் சந்திப்பில் சொன்னார். பாட்சா படத்தில் 'உண்மையைச் சொன்னேன்' என ரஜினி பேசிய வசனத்தைச் சீமான் தனக்குப் பிடித்த வசனம் என்றும் சொன்னார்.
கூடவே ரஜினியின் உடல்மொழி, வசன உச்சரிப்பு எனப் பல நுட்பமான விசயங்களைச் சுட்டிக்காட்டி சீமான் ரசித்துப் பேசினார். அதை ரஜினி அவ்வளவு அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். 'வேட்டையன்' படத்தின் கான்செப்ட் தனது கொள்கைக்கு நெருக்கமானதாக இருந்ததைச் சீமான் சொன்னார். இந்தச் சந்திப்புக்கு முன்பு ரஜினி ஒரு விருந்து கொடுத்தார். அந்த உபசரிப்புக்கு பிறகுதான் பேச்சுவார்த்தை இருவருக்கும் இடையே தொடர்ந்தது" என்று விளக்கம் அளித்துள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications