தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வறுத்தெடுக்கப் போகும் வெயில்.. முக்கிய அப்டேட் தந்த வானிலை ஆய்வு மையம்
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது, இதன் காரணமாக 2ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மழைக்கு வாய்ப்புள்ளது.
கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசான முதல் மிதமான மழை பெய்யும்

மழை பெய்ய வாய்ப்பு
தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். 3ஆம், தேதி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன்கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது

கனமழை பெய்யும்
டெல்டா (தஞ்சாவூர் , திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) , புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் கரூர், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்) 3 செண்டிமீட்டரும் , தொண்டி (ராமநாதபுரம்), தூத்துக்குடி துறைமுகம் ஏடபிள்யூஎஸ் (தூத்துக்குடி), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), கடலாடி (ராமநாதபுரம்), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) தலா 1 செண்டிமீட்டரும் மழை பெய்துள்ளது

மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென் தமிழகம் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 1ஆம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்." என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications