எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க.. வேளச்சேரி பக்கம் போறீங்களா? தடம் தெரியாமல் மாறுது.. அசரப்போறீங்க!
சென்னை: சென்னையில் வேளச்சேரி மற்றும் பெருங்குடி எம்.ஜி.ஆர். சாலையை இணைக்கும் 3.4 கிலோமீட்டர் நீளமுள்ள MRTS சாலை புனரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எதிர்பார்த்ததை விட இங்கே பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சமீபத்தில் சென்னையின் நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள காதர் நவாஸ் கான் (KNK) சாலை, 'முழுமையான வீதிகள்' (Complete Streets) திட்டத்தின் கீழ் ஒரு நவீன மற்றும் பாதசாரிகளுக்கு உகந்த இடமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், வாகனப் போக்குவரத்தை விட பாதசாரிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு முன்னுரிமை அளிப்பதாகும். இதற்காக இச்சாலையில் அகலமான மற்றும் தடையற்ற நடைபாதைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலான சாய்வுதளங்கள், மற்றும் மக்கள் அமர்ந்து உரையாட ஏதுவாக நவீன இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மழைநீர் வடிகால் அமைப்புகள் சீரமைக்கப்பட்டு, மின்சாரக் கம்பிகள் பூமிக்கடியில் கொண்டு செல்லப்பட்டதன் மூலம் சாலையின் அழகியல் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், போதிய வெளிச்சம் தரும் தெருவிளக்குகள், பசுமையான செடிகள் மற்றும் திட்டமிடப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் இச்சாலையை ஒரு சர்வதேச தரத்திலான வணிக மற்றும் பொழுதுபோக்கு மையமாக மாற்றியுள்ளன. சென்னை மாநகராட்சியின் இந்த முன்னெடுப்பு, நகர்ப்புற வளர்ச்சியில் பொதுமக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதோடு, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான ஒரு பொதுவெளியை உருவாக்கியுள்ளது.
வேளச்சேரி சாலை
அதன்படியே சென்னையில் வேளச்சேரி மற்றும் பெருங்குடி எம்.ஜி.ஆர். சாலையை இணைக்கும் 3.4 கிலோமீட்டர் நீளமுள்ள MRTS சாலை புனரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் 80% பணிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளன. இந்த சாலைப் புனரமைப்புப் பணிகளுக்காக 8.09 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.
தெற்கு ரயில்வே இந்த சாலையை கிரேட்டர் சென்னை மாநகராட்சிக்கு ஒப்படைத்த பின்னரே புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் மூன்று தசாப்தங்களாக சீரமைக்கப்படாமல் இருந்த பெருங்குடி-வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ். சாலை, அண்ணா நகர் போன்ற நவீனமயமாக்கப்பட்ட வடிவத்திற்கு மாற்றப்பட உள்ளது.
சென்னை சாலை புனரமைப்பு
சென்னையின் முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான MRTS ரயில் பாதை, வேளச்சேரியையும் பெருங்குடி எம்.ஜி.ஆர். சாலையையும் இணைக்கிறது. இந்தப் புனரமைப்புப் பணிகள் மூலம், பொதுமக்களின் போக்குவரத்து எளிமையாக்கப்பட்டு, இப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்களின் அன்றாடப் பயணம் மிகவும் எளிதாகும்.
இந்த திட்டத்தின் மூலம், சென்னை மாநகரின் உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் மேம்படும். அனைத்துப் பணிகளும் திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிந்தவுடன், இப்பகுதியின் தோற்றம் மேம்பட்டு, போக்குவரத்து சீராகும்.
புதிய மாற்றங்கள் என்னென்ன?
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, சாலையின் இருபுறமும் உணவு கடைகள், பசுமையான இடங்கள், மற்றும் நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், கடைகள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் புதிய வசதிகள் உருவாக்கப்படும். இதன்மூலம், இரவு நேரங்களிலும் மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு முக்கிய மையமாக இந்த சாலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேளச்சேரி மற்றும் பெருங்குடி எம்.ஜி.ஆர். சாலை
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர், "இந்த சாலையை சீரமைக்க ஒரு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆலோசகரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், சாலை சீரமைப்புப் பணிகள் தொடங்கும்," என்று தெரிவித்தார்.
கடந்த மாதம், தெற்கு ரயில்வேயிடமிருந்து சாலைப் பராமரிப்புப் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி முழுமையாகக் கையகப்படுத்தியது. இந்த சாலையை ஒரு முழுமையான, நவீன சாலையாக மாற்ற, மாநகராட்சி சுமார் 15 கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் குறைப்பு
தற்போது, தரமணி மற்றும் பெருங்குடிக்கான ஒரு முக்கியமான இணைப்பாக இந்த 3 கி.மீ. தூர சாலை உள்ளது. இந்த புனரமைப்பு மூலம், வேளச்சேரியில் இருந்து ஓ.எம்.ஆர். செல்லும் பயணிகளுக்கான பயண நேரம் குறையும். மேலும், சி.எம்.ஆர்.எல். கட்டுமானத்தால் ஏற்படும் போக்குவரத்து மாற்றங்களால் பாதிக்கப்படாமல் பெருங்குடியை அடைய இது ஒரு மாற்று வழியாயும் அமையும்.
எம்.ஆர்.டி.எஸ். நிலையங்களுக்கும், வேளச்சேரி 100 அடி சாலைக்கும் இடையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. பெங்களூருவின் சர்ச் ஸ்ட்ரீட் போன்று இந்த சாலை மறுசீரமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது சாலையின் பெரும்பகுதி பள்ளங்களாக இருப்பதால், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி, வெள்ளத்தில் மூழ்கும் நிலை உள்ளது. இதனால் வேளச்சேரி - பெருங்குடி இடையே இருவழிப் போக்குவரத்திற்குப் பதிலாக ஒரு வழிப்பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை நிலவி வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications