Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும்.. முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தனித்தீர்மானம் கொண்டு முதல்வர் ஸ்டாலின். தனித்தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நீட் விலக்கை ஆளும் திமுக அரசு தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக கொண்டு வந்தது.அதன்படியே ஆட்சிக்கு வந்தது நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாடு அரசு மசோதா கொண்டு வந்தது. இந்த மசோதா பல நாட்களாக ஆளுநர் ஆர். என் ரவியால் டெல்லிக்கு அனுப்பப்படாமல் முடங்கி கிடந்தது.

neet exam national testing agency dmk mk stalin politics

அதன்பின் இந்த மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி திருப்பி அனுப்பி இருந்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு மசோதாவில் மாற்றம் செய்து மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியது. இதையடுத்து பெரும் தாமதத்திற்கு பின் இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர். என் ரவி ஒப்புதல் அளித்தார். தற்போது இந்த சட்டம் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது.

முறைகேடுகள்; எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மே 5ஆம் தேதி 4,750 மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வினை எழுதினர். இந்த தேர்வு மொத்தமாக 13 மொழிகளில் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. நீட் தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நடந்தன. ஆனால் தேசிய தேர்வு முகமை குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்தது. இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தனித்தீர்மானம் கொண்டு முதல்வர் ஸ்டாலின். தனித்தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அறிக்கை; முன்னதாக நீட்டை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 4ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் சில மாணவர்களுக்கு 718, 719 போன்ற மதிப்பெண்கள் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனென்றால் நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு தவறாக பதில் அளித்தாலும் 4 மதிப்பெண்கள் குறைக்கப்படும். அதேபோல் நெகட்டிவ் மார்க்காக 1 மதிப்பெண் குறைக்கப்படும் என்பதால், 715 மதிப்பெண்கள் எடுப்பதே சாத்தியம். இது நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதிய மாணவர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விளக்கம் அளித்த தேசிய தேர்வு முகமை, தேர்வு நேரத்தில் ஏதேனும் காரணங்களால் நேரம் வீணானால், அதற்கு ஈடாக கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு மட்டும் அத்தகைய சலுகை வழங்கப்பட்டது என்று தெரிவித்தது.

அதுமட்டுமல்லாமல் ஒரே தேர்வு மையத்தை தேர்வு எழுதிய 6 மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதனால் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகநூலில் ஒரு பதவினை எழுதி இருக்கிறார்.

அதில், அண்மையில் நீட் தேர்வு நடந்த பெரும் முறைகேடுகளால் தேசிய அளவில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. நீட் தேர்வின் ஆபத்துகளை முதல்முதலில் உணர்ந்து முதலில் பிரச்சாரம் செய்தது திமுக தான். ஆட்சிக்கு வந்ததும் நீட் பாடதொகுப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் குழு அமைத்தது திமுக அரசு. தீவிர கள ஆய்வு, மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பிடமும் கருத்து கேட்டு நீதிபதி ஏகே ராஜன் குழு அறிக்கை அளித்தது.

அந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தமிழ்நாட்டின் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக நீண்ட தாமதத்திற்கு பின் ஆளுநரால் அனுப்பி வைக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்பதை அம்பலப்படுத்திய நீதிபதி ஏகே ராஜனின் அறிக்கை பல மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டது. தற்போது அந்த அறிக்கையை மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி, பஞ்சாப், பெங்காலி உள்ளிட்ட மொழிகளிலும் நீதிபதி ஏகே ராஜன் அறிக்கையை வெளியிட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+