சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிஞ்சிலேயே.. மிரட்டும் க்ரைம்.. சிக்கும் சிறார்கள்.. தமிழகத்தில் 5 வருடங்களில் குற்றங்கள் இரட்டிப்பு

தமிழகத்தில் சிறார் குற்ற செயல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கடந்த 5 வருடங்களில் சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.. அதில், 2016 முதல் 2020 வரையிலான 5 ஆண்டுகளில் இளம்குற்றவாளிகள் மீதான வழக்குகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.

2016-ல் நடந்த 1,661 கொலைகளில் 104 அதாவது 6.3% பேர் சிறார் குற்றவாளிகள் சம்பந்தப்பட்டிருந்தனர்.. அந்த முழு அறிக்கை விவரம் இதுதான்

அந்த தமிழ்நாடு வீரர்தான் சிக்கல்.. தோனிக்கு சிம்ம சொப்பனமான சென்னை பையன்.. சிஎஸ்கேவிற்கு செக்கா? அந்த தமிழ்நாடு வீரர்தான் சிக்கல்.. தோனிக்கு சிம்ம சொப்பனமான சென்னை பையன்.. சிஎஸ்கேவிற்கு செக்கா?

 கோவை - சென்னை

கோவை - சென்னை

குறிப்பாக, கோவை பெருநகரத்தை பொறுத்தவரை சராசரியாக 1 லட்சம் பெண்களில் 9 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளது என்றும், சென்னையை பொறுத்தவரை சராசரியாக 1 லட்சம் பெண்களில் 13.4 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.. 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 300 பேர் கொலை செய்யப்பட்டுள்ள தகவல் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

 இளம் குற்றவாளிகள்

இளம் குற்றவாளிகள்

இப்போதும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.. அதில், 2016 முதல் 2020 வரையிலான 5 ஆண்டுகளில் இளம்குற்றவாளிகள் மீதான வழக்குகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. 2016-ல் நடந்த 1,661 கொலைகளில் 104 அதாவது 6.3% பேர் சிறார் குற்றவாளிகள் சம்பந்தப்பட்டிருந்தனர்..

அதிகரிப்பு

அதிகரிப்பு

2016-ம் ஆண்டில் 1,603 கொலைகளில் 48 கொலைகுற்றங்கள் அதாவது 3 சதவீதம் மட்டுமே சிறார்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இது மெல்ல மெல்ல அதிகரித்து 2020-ல் 1,661 கொலைகளில் 104 குற்றங்களில் அதாவது 6.3 சதவீதம் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்... 2016-ல் 3 சதவீதமாக இருந்தது படிப்படியாக 2017-ல் 3.4%, 2018-ல் 4.8%, 2019-ல் ஆண்டில் 5.3%, 2021-ல் ஆண்டில் 6.1% என அதிகரித்துள்ளது.

டெல்லி

டெல்லி

தேசிய அளவில் கணக்கிட்டால் கொலை குற்றங்களில் சிறார்கள் குற்றம் சாட்டப்படும் அளவு கடந்த 2016-ம் ஆண்டில் இருந்ததிலிருந்து 2020-ம் ஆண்டு வரை குறைந்து பிறகு சற்று அதிகரித்துள்ளது... அதாவது 2016-ல் 30,450 கொலை வழக்குகளில் 2.9% சிறார்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்... ஆனால், 2017-ம் ஆண்டில் 28,653 கொலைகளில் 2.5% என்றும், 2018-ம் ஆண்டில் 29,017 கொலைகளில் 2.6% சிறார்களும், 2019-ல், 28,918 கொலைகளில் 2.9% மற்றும் 2020-ல் 29,193 கொலைகளில் 2.6% சிறார்களும் குற்றம் சாட்டப்பட்டனர்.

குற்றவாளிகள்

குற்றவாளிகள்

ஆனால், நம் தமிழகத்தை பொறுத்தவரை கொலை குற்றங்களில் சிறார்கள் குற்றம் சாட்டப்படும் அளவு கடந்த 5 வருடங்களில் 2 மடங்கு அதிகரித்துள்ளது... அதிலும் 2019, 2020-ம் ஆண்டுகளில் ஒட்டுமொத்த கொலை வழக்குகள் குறைந்துள்ளன. 2019-ம் ஆண்டில் 1,745 கொலைகள் நடந்துள்ள நிலையில், 2020-ம் ஆண்டில் 1661 ஆக கொலைகள் குறைந்துள்ளன. ஆனாலும், சிறார்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்படும் அளவு 2019-ம் ஆண்டில் 92லிருந்து 2020-ம் ஆண்டில் 104 ஆக அதிகரித்துள்ளது.

கொலை குற்றங்கள்

கொலை குற்றங்கள்

தேசிய சராசரியோடு ஒப்பிடும்போது, தமிழகத்தில் சிறார்கள் கொலைக் குற்றங்களில் குற்றவாளிகளாக சேர்க்கப்படும் அளவு அதிகரித்திருக்கிறது... ஆனால் நாடு முழுவதும் சிறார்கள் கொலைக் குற்றங்களில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படும் சதவீதத்தைக் கணக்கிட்டால் 3 சதவீதத்துக்குள்தான் இருக்கிறது... டெல்லியில் 12.1% சிறார்கள், குஜராத்தில் 6.7%, மத்தியப் பிரதேசம் 6.4% என அதிகமான சதவீதத்தில் சிறார்கள் கொலைக் குற்றங்களில் சேர்க்கப்படுகின்றனர்.

 மதுரை

மதுரை

அதனால் தமிழகத்தில்தான் சிறார் குற்றவாளிகள் அதிகரித்துள்ளனர்.. குறிப்பாக, சென்னை, மதுரை புறநகர் போலீஸ் எல்லை, மதுரை நகர்ப்புறம், திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் கொலைக் குற்றங்களில் சிறார்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படும் அளவு அதிகரித்துள்ளது... 2020-ம் ஆண்டில் மதுரை நகர்ப்புறத்தில்தான் 40 கொலை வழக்குகள் பதிவாகி, 8 வழக்குகளில் சிறார்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.. இது 20 சதவீதமாகும். சதவீதத்தின் அடிப்படையில் திருச்சியில் 18 கொலை வழக்குகளில் 4 கொலை வழக்குகளில் சிறார்கள் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர், இது 22.2 சதவீதமாகும்.

கணக்கீடு

கணக்கீடு

சென்னையில் 150 கொலைக் குற்றங்களில் 16 கொலை வழக்கில் மட்டுமே சிறார்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இது 10.7 சதவீதமாகும். அடுத்தபடியாக திருவள்ளூரில் 43 கொலைக் குற்றங்களில் 8 வழக்குகளில் சிறார்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். இது 18.6 சதவீதமாகும்... 2020-ம் ஆண்டு என்சிஆர்பி அறிக்கையின்படி, குற்றங்களில் சிறார்கள் ஈடுபடும் சதவீதம் 16.4 ஆக இருக்கிறது. தேசிய அளவில் தமிழகம் இதில் 4-வது இடத்தில் இருப்பது கவலைக்குரியதாகும். 18 வயதுக்குக் கீழுள்ள சிறார்கள் ஒரு லட்சம் பேரில் எத்தனை பேர் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கான கணக்கீட்டில் தமிழகத்தில் 16% ஆக இருக்கிறது.

கிரிஜாகுமார்பாபு

கிரிஜாகுமார்பாபு

குழந்தைகள் உரிமை ஆலோசகரும், சென்னை சிறுவர் நீதி வாரியத்தின் முன்னாள் உறுப்பினருமான கிரிஜா குமார்பாபு இதை பற்றி சொல்லும்போது, பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் மீது தனி கவனம் தேவை.. 8-ம் வகுப்பிலிருந்து தேர்வுகள் கட்டாயமாக்கப்படுவதால், 8-ம்வகுப்புக்குப் பிறகு பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்கள் பலர் உள்ளனர்...

அறிவுறுத்தல்

அறிவுறுத்தல்

அவர்களுக்கு கல்வி அறிவு தேவை.. இப்படிப்பட்ட குழந்தைகள்தான், தவறான செயல்பாடுகளில் இறங்கிவிடுகின்றனர்.. அல்லது சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களிடம் சிக்கிவிடுகின்றனர்.
இதைதவிர இந்த குழந்தைகள் போதைப்பொருளின் தாக்கத்திலும் விழுந்துவிடுகின்றனர்.. போதைப் பழக்கத்தின் தாக்கம் இல்லாமல் பெரும்பாலான குழந்தைகள் குற்றங்களிலோ அல்லது கொலைக் குற்றங்களிலோ ஈடுபடமாட்டார்கள்... சிறார்களுக்கு போதைப் பொருட்கள் கிடைப்பதைத் தடை செய்ய வேண்டும்" என்றார்.

English summary
The number of murder cases doubled in the five years from 2016 to 2020 in Tamil Nadu, NCRB reports
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X