சென்னையில் சூப்பர் மாற்றம்.. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை சரசரவென சரிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று கொரோனா பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தற்போதைய நிலையில் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. சென்னையில் 12,190 பேர் மட்டுமே தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வந்தது. ஆனால் இந்த மாதம் கொரோனா பாதிப்பு ஆயிரம் என்கிற அளவிலேயே உள்ளது.

The number of people recovering from corona infection in Chennai today is higher

சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,01,951 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 1,303 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்புடன் 12.190 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் இதுவரை 87,604 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 2,157 பேர் சென்னையில் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

ஞாயிறு காலை சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 22 சதவீதம் நோயாளிகள் இருக்கிறார்கள். மாதவரம் மண்டலத்தில் 20 சதவீதம் நோயாளிகளும் தொற்று பாதிப்புடன் உள்ளார்கள்.அதிகபட்சமாக சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,511 பேரும், அண்ணாநகரில் 1,327 பேரும், அம்பத்தூரில் 1,307 பேரும் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தார்கள். இந்த எண்ணிக்கை திங்கள்கிழமை காலை நிலவரப்படி இன்னமும் குறையப் போகிறது.

இன்று காலை 12,436 ஆக இருந்த ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை இன்று மாலை 12,190 ஆக குறைந்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மதுரை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களையும் விட குறைவான அளவிலேயே நோய் பாதிப்பு உள்ளது. எனவே விரைவில் சென்னை கொரோனாவில் இருந்து மீளும் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+