நடுஇரவில் எடுத்த முடிவு.. பொன்முடி மட்டும் இதை செய்யலைன்னா.. மொத்தமாக சிக்கலாகி இருக்கும்.. அதிருதே
சென்னை: பொன்முடி நேற்று முதல்நாள் இரவு எடுத்த முடிவு ஒன்று அவருக்கு சாதகமாக மாறி உள்ளது. அந்த முடிவை மட்டும் அவர் எடுக்காமல் இருந்திருந்தால் பெரிய சிக்கலாக அது மாறி இருந்திருக்கும்.
நேற்று பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என்று கூறி.. அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. இதையடுத்து பொன்முடியும் மனைவி விசாலாட்சி, இருவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி குறைந்த தண்டனை விதிக்க வேண்டும் என்று கை கூப்பி கோரிக்கை விடுத்தார்.

அதற்கு தங்களுக்கு மேல் உள்ள நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிவாரணம் கோரலாம் என நீதிபதி தெரிவித்தார். தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏவாக பதவி வைக்கும் தகுதியை இழந்துவிட்டார்.
அதோடு 30 நாட்கள் அவகாசம் அவருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அதுவரை உயர் நீதிமன்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
தீர்ப்பு நிறுத்தி வைப்பு; எல்லா சமயமும் இது போல தீர்ப்புகள் 30 நாட்கள் எல்லாம் நிறுத்தி வைக்கப்படாது. சில சமயம் ஒரு நாள் இரண்டு நாள் அதிகபட்சம் 1 வாரம் நிறுத்தி வைக்கப்படும். ஆனால் பொன்முடிக்கு 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கு ஒரு காரணம் கோர்ட்டில் அவர் இறங்கி வந்து கையெடுத்து கும்பிட்டு வைத்த கோரிக்கை. அதோடு இல்லாமல் அவர் கோர்ட்டில் ஆஜர் ஆனது. அவர் கோர்ட்டிற்கு வரலாம் அல்லது வீடியோ காலில் ஆஜர் ஆகலாம் என்றுதான் நீதிபதி குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் பொன்முடி நேற்று முதல்நாள் இரவு கோர்ட்டில் ஆஜராகும் முடிவை எடுத்தார். வீடியோ காலில் வந்தால் நீதிபதியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். நீதிபதி மனநிலையை மாற்ற இது உதவாது என்பதால் பொன்முடி நேரில் ஆஜராகி உள்ளார். இரவோடு இரவாக அவர் எடுத்த முடிவுதான். நேற்று அவருக்கு சாதகமாக மாறியது என்கிறார்கள்.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
வழக்கு பின்னணி; இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த 19ஆம் தேதி தீர்ப்பளித்தார். இதில்தான் தற்போது பொன்முடிக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications