சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விபரீத போதை உயிரை பறித்தது.. போதைக்காக தின்னரில் எலுமிச்சைச்சாறு கலந்து குடித்த பெயிண்டர் உயிரிழப்பு

Google Oneindia Tamil News

சென்னை: காஞ்சிபுரத்தில் போதைக்காக பெயிண்டில் கலக்கும் தின்னர் என்கிற ரசாயனத்தில் எலுமிச்சை பழச்சாறை பிழிந்து குடித்த பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்து வந்தது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

 எங்களால் பணம் சம்பாதிச்சீங்க.. ஓட்டு மட்டும் பாஜகவுக்கா? சென்னை வட இந்தியர்களிடம் சேகர்பாபு பேச்சு எங்களால் பணம் சம்பாதிச்சீங்க.. ஓட்டு மட்டும் பாஜகவுக்கா? சென்னை வட இந்தியர்களிடம் சேகர்பாபு பேச்சு

மருந்து கடைகள், பால் பூத்கள் தவிர அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. அரசுக்கு வருவாய் அள்ளி கொடுக்கும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

போதை படுத்தும் பாடு

போதை படுத்தும் பாடு

இதனால் மதுபிரியர்களை குறி வைத்து கள்ளச் சாராய விற்பனை நடந்து வருகிறது. ஆங்காங்கே நடக்கும் கள்ளச்சாராய விற்பனையை போலீசார் கண்டுபிடித்து தடுத்து வருகின்றனர். கள்ளச்சாராய விற்பனையை போலீசார் தடுத்து நிறுத்தினாலும் சிலர் போதைக்காக எதை, எதையோ குடித்து பின்விளைவுகளை சந்தித்து வருகின்றனர்.

விபரீத போதை

விபரீத போதை

இப்படிபட்ட விபரீத போதை, பெயிண்டர் ஒருவரின் உயிரை பறித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே குன்னவாக்கம் பகுதியில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருபவர் சங்கர். அதீத குடிப்பழக்கம் உடைய இவர் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் குடிக்க முடியாமல் மன விரக்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது. 'எப்படியாவது போதை வேண்டும்' என்ற நிலைக்கு தள்ளப்பட்ட சங்கர் விபரீத முயற்சியில் இறங்கினார்.

பரிதாப உயிரிழப்பு

பரிதாப உயிரிழப்பு

அதாவது போதைக்காக பெயிண்டில் கலக்கும் தின்னர் என்கிற ரசாயனத்தில் எலுமிச்சை பழச்சாறை பிழிந்து அதனை கடந்த 3 நாட்களாக குடித்து வந்துள்ளார் சங்கர். இந்த நிலையில் இன்று சங்கர், அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சிவசங்கரன்,சுரேஷ், கிருஷ்ணன் கூட்டாக எலுமிச்சை பழம் சாறு பிழிந்து தின்னர் என்னும் ரசாயனத்தை குடித்து உள்ளனர். இதனை குடித்தவுடன் சங்கருக்கு உடனடியாக வலிப்பு ஏற்பட்டதால் அவரை உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் சங்கர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

சுயநினைவு இழந்த 2 பேர்

சுயநினைவு இழந்த 2 பேர்

மேலும் கிருஷ்ணன் மற்றும் சிவசங்கர் ஆகியோரும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர்களையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருவரும் சுயநினைவு இன்றி சிகிச்சை பெற்று வருகின்றனர். சங்கரின் மற்றொரு நண்பரான சுரேஷ் என்ன ஆனார் என்பது கிராம மக்களுக்கு தெரியவில்லை .அவரை வயக்காட்டில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஒரகடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு சுரேஷை தேடி வருகின்றனர்.

English summary
The painter died tragically after squeezing lemon juice into a chemical called thinner, which is mixed into the paint for intoxication
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X