சசிகலா பற்றியெல்லாம் கவலையில்லை... நாங்கள் எம்ஜிஆர் வழி நடப்பவர்கள் - அமைச்சர் ஜெயக்குமார்
கட்சியும் ஆட்சியும் சசிகலா மற்றும் அவரது குடும்ப தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: நாங்கள் எம்.ஜி.ஆர் வழி நடப்பவர்கள். சசிகலா வந்தாலும் வராவிட்டாலும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. கட்சியும் ஆட்சியும் சசிகலா மற்றும் அவரது குடும்ப தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சசிகலா விடுதலை பற்றிய செய்தி கடந்த இரண்டு நாட்களாக பேசு பொருளாகியுள்ளது. சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன்தான் இந்த விவாதத்தை தொடங்கி வைத்தனர். சசிகலாவின் வீட்டில் வருமான வரித்துறை நோட்டீஸ் ஒட்டியதை அடுத்து சசிகலா விரைவில் விடுதலையாவார் என்று போகிற போக்கில் சொல்லி விட்டு போக அதைப்பற்றி பலரும் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 149ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் சசிகலாவின் விடுதலை பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் சொன்ன அமைச்சர் ஜெயக்குமார் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "கப்பலோட்டிய தமிழன், கப்பலோட்டிய இந்தியன் என்ற அளவில் தமிழனுக்கும் இந்தியனுக்கும் பெருமை சேர்த்தவர் வ.உ.சி என்று புகழாரம் சூட்டினார். டிஎன்பிஎஸ்சி குரூப்-4 கலந்தாய்வுக்கான கவுன்சிலிங் விரைவில் நடக்கும் என்று கூறினார்.
Recommended Video
நாங்கள் எம்.ஜி.ஆர் வழி நடப்பவர்கள். சசிகலா வந்தாலும் வராவிட்டாலும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. கட்சியும் ஆட்சியும் சசிகலா மற்றும் அவரது குடும்ப தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications