Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ஈசிஆரில் ஜேசிபியுடன் போன அதிகாரிகள்.. தரைமட்டமான விஜிபி ரிசார்ட்டின் சுற்றுச்சுவர்.. அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஆறு வழிப்பாதையாக்கும் விரிவாக்க பணிகளுக்காக, பிரபல விஜிபி ரிசார்ட்டின் சுற்றுச்சுவர், முகப்பு பகுதிகள் இன்று அதிரடியாக இடித்து அகற்றப்பட்டுள்ளது. உரிய நோட்டீஸ் அனுப்பியும் அந்நிறுவனம் சுற்றுச்சுவர் உள்ளிட்ட பகுதிகளை அகற்றாததால், நெடுஞ்சாலைத்துறையினர் இன்று ஜேசிபி இயந்திரம் கொண்டு அவற்றை அகற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகரின் பிரதான நுழைவு சாலைகளில் ஒன்றான கிழக்கு கடற்கரை சாலை (ecr) கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறது. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலினை குறைக்கும் வகையில், திருவான்மியூர் முதல் அக்கரை வரை ஆறுவழித் தடமாக அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Chennai ecr East Coast Road

இந்த கிழக்குக் கடற்கரைச் சாலை, சென்னை பெருநகர், திருவான்மியூர், மாமல்லபுரம், புதுச்சேரி, சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, இராமநாதபுரம் மற்றும் துாத்துக்குடி வழியாக, கன்னியாகுமரியுடன் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.

இங்கு ஐடி நிறுவனங்களின் அதிவேக வளர்ச்சி மற்றும் பெருகிவரும் அடுக்குமாடி கட்டிடங்களின் எண்ணிக்கை ஆகியவை காரணமாக இவ்வழித்தடத்தில் வாகனப்போக்குவரத்து எண்ணிக்கை மிகவும் அதிகமாகி இருக்கிறது. இச்சாலையினை ஆறுவழித் தடமாக அகலப்படுத்தினால் மட்டுமே பெரும் வாகன நெரிசலை குறைக்க முடியும்.

இந்த பணிகள் , கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரில் தொடங்கி, அக்கரை வரை, 8.80 கி.மீ. நீளத்திற்கு நடைபெற்று வருகிறது.

இச்சாலையை, திருவான்மியூர் முதல் அக்கரை வரை ஆறுவழித் தடமாக அகலப்படுத்த நிலஎடுப்புப் பணிக்கு, ரூ.940 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அரசு வழங்கியுள்ளது . திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லுார் ஆகிய ஆறு கிராமங்களில் நிலஎடுப்புப் பணி 15 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது .

இச்சாலை விரிவாக்கப் பணியானது, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம் மற்றும் நீலாங்கரை முதல் அக்கரை வரை என 4 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கொட்டிவாக்கம், பாலவாக்கம் மற்றும் நீலாங்கரை முதல் அக்கரை வரை 3 கட்டங்களாகப் பணிகள் நடைபெற்று வருகிறது.

கிழக்குக் கடற்கரைச் சாலையை ஆறுவழித் தடமாக அகலப்படுத்துவதற்கு கொட்டிவாக்கம் பகுதியில் ரூ.19 கோடி மதிப்பீட்டிலும், பாலவாக்கம் பகுதியில் ரூ.18 கோடி மதிப்பீட்டிலும், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் ரூ.135 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவுடையும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Chennai ecr East Coast Road

இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஆறு வழிப்பாதையாக்கும் விரிவாக்க பணிகளுக்காக, பிரபல விஜிபி ரிசார்ட்டின் சுற்றுச்சுவர், முகப்பு பகுதிகள் இன்று அதிரடியாக இடித்து அகற்றப்பட்டுள்ளது. உரிய நோட்டீஸ் அனுப்பியும் அந்நிறுவனம் சுற்றுச்சுவர் உள்ளிட்ட பகுதிகளை அகற்றாததால், நெடுஞ்சாலைத்துறையினர் இன்று ஜேசிபி இயந்திரம் கொண்டு அவற்றை அகற்றினர்

இது ஒருபுறம் எனில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட சாலை மேம்பாலம் கட்டுவது குறித்து 2024-2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஏனெனில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான சாலை 15 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சாலை மிக கடுமையான நெரிசல் உள்ள சாலையாகும். அதற்கு காரணம், இச்சாலைப் பகுதியில் 17 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. எனவே, இச்சாலையை கடக்க சுமார் 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை ஆகிறது. இச்சாலையில் தற்பொழுது 69.000 வாகனங்கள் நாளொன்றுக்கு செல்கின்றன. திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான 15 கிலோ மீட்டர் தூரத்தில், சாலையின் இருபுறத்திலும் 347 சிறுசாலைகள் / தெருக்கள் இருக்கின்றன.

இதனால் இச்சாலையை எவ்வளவு அகலப்படுத்தினாலும், அதிகமான வாகனப் போக்குவரத்தின் காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு, அரசு பரிசீலணை செய்து வருகிறது.

Chennai ecr East Coast Road

கட்டப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் டைடல் பூங்கா சந்திப்பில் துவங்கி எல்பி சாலைச் சந்திப்பு, கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் அக்கரை வழியாக உத்தண்டியில் முடிவடைய உள்ளது. அத்துடன், எல்பி சாலைச் சந்திப்பு, திருவான்மியூர் ஆர்டிஓ ஆபீஸ், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் அக்கரைச் சந்திப்பில் பாலத்தில் ஏறி அல்லது இறங்கிச் செல்லும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. இப்பாலத்தின் மூலம் இப்பகுதியை 20 நிமிடங்களில் கடக்க இயலும்.

தற்போதைய ஆறு வழிச்சாலை அமைக்க நில எடுப்பு செய்யப்பட்டு வருகிறது. கூடுதல் நில எடுப்பு ஏதும் மேற்கொள்ளாமல், 18 மாதங்களுக்குள் இந்த சாலை மேம்பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என அரசு விரும்புகிறது. அநேகமாக ஈசிஆர் சாலையில் ஆறுவழிச்சாலை பணிகள் ஏப்ரலில் முடியும் போது ஓரளவு நெரிசல் குறையும் என்றாலும், மேம்பாலம் கட்டினால் தான், முழுமையாக நெரிசல் இன்றி சென்னைவாசிகள் பயணிக்க முடியம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+