பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை! எடப்பாடிக்கு ஆதரவாக மாறிய அந்த வாதம்! கோர்ட்டில் நடந்தது என்ன?

ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட அதிமுகவில் வாக்காளர் பட்டியல் எங்கே? ஓபிஎஸ் தரப்பு கேள்வி எழுப்பி உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை, பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம்; ஆனால் முடிவை அறிவிக்கக் கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு ஓ பன்னீர்செல்வத்தின் வாதமும் மிக முக்கியமானது ஆகும்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்றோடு நிறைவு பெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்ப கட்டணம் 25 ஆயிரம் ரூபாய். 27ஆம் தேதி காலை 9 மணி முதல் வாக்கு எண்ணிக்கை செய்யப்படும் என்று அதிமுக தலைமை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது இந்த தேர்தலுக்கு எதிராக இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடுத்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசரமாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் மார்ச் 22ம் தேதி வரை முடிவுகளை வெளியிட வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு முன்கூட்டியே மார்ச் 22-ல் விசாரணை செய்யப்படும். 24-ல் தீர்ப்பு வழங்கப்படும், அதுவரை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 ஓபிஎஸ் வாதம்

ஓபிஎஸ் வாதம்

இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் வைத்த வாதத்தில்,

ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பத்திற்கு எதிராக தேர்தல் நடக்கிறது

பொதுக்குழு முடிவிற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் முடிவு வரும் முன் இவர்கள் வேட்புமனு தாக்கலை தொடங்கி உள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தல் அவசர கதியில் நடத்தப்படுவதால் தடை விதிக்க வேண்டும்.

சனி, ஞாயிறு இரண்டு நாட்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சொன்னதை ஏற்க முடியாது.

ரொம்ப தவறு

ரொம்ப தவறு

பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் விதிகளில் பல மாற்றங்களை செய்துள்ளனர்.

10 ஆண்டுகள் உறுப்பினர், 5 ஆண்டுகள் தலைமை கழக நிர்வாகி என்ற விதியில் திருத்தம் செய்யப்பட்டது தவறு.

36 மணிநேரத்தில் 20 மா.செ.க்கள் முன்மொழிதல், வழிமொழிதல் எப்படி சாத்தியம்? ஆகும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி என்றால் அடிப்படை தொண்டர்கள் போட்டியிட முடியாது.

பொதுச்செயலாளர் பதவி தேர்தலில் கட்சி அடிப்படை விதிகள் திருத்தம் செய்யப்பட்டது சரி இல்லை.

ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட அதிமுகவில் வாக்காளர் பட்டியல் எங்கே? ஓபிஎஸ் தரப்பு கேள்வி எழுப்பி உள்ளார்.

எடப்பாடி வாதம்

எடப்பாடி வாதம்

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி வைத்த வாதத்தில்,


பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டால்தான் கட்சியை நடத்த முடியும்.

லோக்சபா தேர்தல் நெருங்குவதால் ஒற்றை தலைமை அவசியம் ஆகிறது.

பொதுச்செயலர் தேர்தல் நடைபெறுவதில் தவறு இல்லை. இதற்கு முன் கட்சி தேர்தல்கள் நடைபெற்ற போது இதேபோல்தான் வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

வேட்புமனுக்களை கொடுக்க இதே அளவு கால அவகாசம்தான் கொடுக்கப்பட்டது. கடந்த முறை 2021ல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்கள் நடந்தன.

அப்போதும் ஞாயிற்றுக்கிழமைதான் வேட்புமனுக்கள் வாங்கப்பட்டன. அதனால் இப்போது ஞாயிற்றுக்கிழமை வேட்புமனுக்களை வாங்குவதில் தவறு இல்லை.

வழக்கு முக்கியம்

வழக்கு முக்கியம்

உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று கூறிவிட்டது. அந்த வழக்கில் விசாரணை நடத்தும் வரை பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்து இருந்தனர். தற்போது அந்த வழக்கு முடிந்துவிட்டது.

இதனால் இனியும் வழக்கில் தடை தொடர முடியாது. அதனால் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது சரியானதே. இப்போது தேர்தலுக்கு தடை கோர முடியாது. அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தேவை. அப்போதுதான் கட்சி வலிமையாக இருக்கும்.

மாறாக அதிமுகவின் அஸ்திவாரத்தை உலுக்கும் வகையில் சிலர் செயல்படுகிறார்கள். கட்சி விரோத நடவடிக்கைகளில் சிலர் செயல்படுகிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுகவே மிகவும் முக்கியம். இங்கே தனி நபர் முக்கியம் இல்லை. தனி நபரை விட இயக்கமே பெரியது. ஆனால் இங்கே தனி நபர்களின் நலனுக்காக சிலர் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

உத்தரவு

உத்தரவு

அதிமுகவில் பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்புதான் வாதம் வைத்தது. அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இனத்தின் வாதத்தை வைத்துவிட்டு இப்போது, அதே வாதத்திற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர். தொண்டர்கள் வாக்கு அளிக்கும் தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர். இந்த தேர்தலை முடக்க அவர்கள் முயற்சிப்பது ஏன்?, என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் வைத்தது. அவரின் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு.. தேர்தலை நடத்தலாம். அதில் தவறு இல்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மார்ச் 22ம் தேதி வரை முடிவுகளை வெளியிட வேண்டாம். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு முன்கூட்டியே மார்ச் 22-ல் விசாரணை செய்யப்படும். 24-ல் தீர்ப்பு வழங்கப்படும், அதுவரை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+