தக்காளி விலை தாறுமாறாக குறைந்தது.. கோயம்பேடு போய் பாருங்க.. ஹேப்பி நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இல்லதரசிகளே, ஓட்டல் வைத்து நடத்துபவர்களே உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை(மொத்த விலை)ரூ.50-ஆக குறைந்துள்ளது.

வரத்து அதிகரிப்பின் காரணமாக கிலோ ரூ.80-க்கு விற்ற தக்காளி, தற்போது ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை நிலையங்களில் தக்காளி கிலோவுக்கு ரூ. 60-ல் இருந்து ரூ.65 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு சந்தைக்கு நேற்று வரை சுமார் 400 டன் வந்த தக்காளி, இன்று 700 டன் வந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கோயம்பேடு சந்தையில் ரூ.50 ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் தக்காளி விலை திடீரென சரசரவென உயர்ந்தது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதால் மக்கள் தக்காளி வாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள். தக்காளி இல்லாமல் எந்த குழம்பும் வைக்க முடியாது என்பதால் என்ன செய்வது என்று தவித்தார்கள். ஓட்டல்களில், குறிப்பாக பிரியாணி கடைகளில் தக்காளி பிரதானம். தக்காளி விலை ஏறியதால் அவர்களும் தவித்து போனார்கள்.

The price of tomato in Chennai Koyambedu vegetable market is reduced by Rs.50

இந்நிலையல் இந்த திடீர் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் நேற்று முதல் தக்காளியை கொள்முதல் விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது..

இதனை பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி சென்றார்கள். இதர காய்கறி விலையும் குறைவாக இருப்பதால் பண்ணை பசுமை கடைகளில் மக்கள் ஆர்வம் காட்டினார்கள்.

இதற்கிடையில் சென்னை திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் கீழ் தேனாம்பேட்டையில் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடையை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறும் போது, "தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கணிசமாக குறைந்துவிட்டது. மேலும் அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும் கடந்த வாரம் முதல் தக்காளி விலை அதிகரித்தது. தோராயமாக நாள் ஒன்றுக்கு சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு 800 டன் வரையில் வரக்கூடிய தக்காளி வரத்து 300 டன் என்ற அளவில் குறைந்த காரணத்தால் தக்காளி விலை ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனையானது.

இதையடுத்து இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கூட்டுறவுத்துறையின் மூலம் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 62 பண்ணை பசுமை நுகர்வோர் பசுமை கடைகள், 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.60 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.

இதனிடையே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை(மொத்த விலை)ரூ.50-ஆக குறைந்துள்ளது. வரத்து அதிகரிப்பின் காரணமாக கிலோ ரூ.80-க்கு விற்ற தக்காளி, தற்போது ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை நிலையங்களில் தக்காளி கிலோவுக்கு ரூ. 60-ல் இருந்து ரூ.65 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு சந்தைக்கு நேற்று வரை சுமார் 400 டன் வந்த தக்காளி, இன்று 700 டன் வந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கோயம்பேடு சந்தையில் ரூ.50 ஆக குறைந்துள்ளது. விரைவில் தக்காளி விலை கணிசமாக குறைந்துவிடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+