அன்வர் ராஜாவின் மவுனவிரதம்! மகனிடம் அலைபேசி! வீட்டை விட்டு வெளியேறி 7 நாட்கள்! அலைமோதும் 2 யோசனைகள்!
சென்னை: அதிமுகவிலிருந்து விலக்கப்பட்ட எம்.ஜி.ஆர்.காலத்து சீனியரான அன்வர் ராஜா கடந்த ஒரு வாரகாலமாக ஆழ்ந்த அமைதி காத்து வருகிறார்.
சென்னையில் தங்குவதை தவிர்த்து சொந்தஊரான ராமநாதபுரத்தில் தங்கியுள்ள அவர், தனது அலைபேசியை கூட மகனிடம் கொடுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அன்வர் ராஜாவுக்கு ஆறுதல் தெரிவிக்க அழைப்பவர்களிடம் அவரது மகனே பேசி வருவதாக கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர். காலம்
அதிமுகவில் எம்.ஜி.ஆரால் ஆட்சிமன்ற குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் அன்வர் ராஜா. ஆட்சிமன்ற குழுவில் இடம்பெற்ற 15 உறுப்பினர்களில் 13 பேர் அமைச்சர்களாகவும் ஒருவர்(ஜெயலலிதா) எம்.பி.யாகவும் இருந்த நிலையில், சாதாரண ஒன்றியச் சேர்மனாக இருந்த அன்வர் ராஜாவுக்கும் அந்த வரிசையில் இடம் கொடுத்து அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர். இப்படி பல்வேறு பெருமைகளை கொண்ட அன்வர் ராஜாவை கடந்த வாரம் கட்சியிலிருந்து விலக்குவதாக அறிவிப்பு வெளியானது.

மவுனவிரதம்
இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர், இந்த அறிவிப்பை இன்னும் ஜீரணிக்கமுடியாமல் மனதில் புழுங்கிவருகிறாராம். உடனடியாக சென்னையிலிருந்து சொந்த ஊரான ராமநாதபுரம் சென்ற அன்வர் ராஜா, அங்கு மவுன விரதம் இருக்கிறாராம். தனது அலைபேசியை கூட மகனிடம் கொடுத்துவிட்டு, 10 நாட்களுக்கு தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கூறிவிட்டாராம்.

அழைப்பு
இதனிடையே அன்வர் ராஜாவை திமுகவுக்கு அழைத்து வரும் பணிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பு முன்னெடுத்திருக்கிறதாம். ''ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.ஸால் அவமானப்படுத்தப்பட்டு நானும் வெளியேறினேன், இன்று நான் நல்லா இல்லையா, அதனால் பேசாமல் தளபதியை பார்த்து திமுகவில் சேர்ந்திடுங்கண்ணே, உங்களுக்கு நீங்க எதிர்பார்க்கிற மரியாதையை தலைவர் தருவாரு'' என அமைச்சரிடம் இருந்து அழைப்புகள் சென்றதாம்.

2 யோசனைகள்
திமுக ஒரு பக்கம் அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், அன்வர் ராஜாவிடம் வேறு கட்சிக்கு செல்லவேண்டாம் என்றும், நாம் ஒன்றாக சட்டப்போராட்டத்தை முன்னெடுத்து இ.பி.எஸ்.க்கு குடைச்சல் கொடுக்கலாம் எனவும் பெங்களூரு புகழேந்தி தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் இது தொடர்பான 2 யோசனைகளும் அன்வர்ராஜாவின் மனதில் அலைமோதுவதாக தெரிவிக்கப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications