ரஷ்யா - உக்ரைன் போருக்கு.. இடையே மோடி மேற்கொண்ட ஸ்மார்ட் மூவ்! வியக்க வைத்த இந்தியாவின் ராஜதந்திரம்
சென்னை: பிரதமர் மோடி அரசாங்கம் மீது பணவீக்கம் மற்றும் வேலை வாய்ப்பு விவகாரத்தில் ஆங்காங்கே சில விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும்.. பிரதமர் மோடிக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் என்பதே ரஷ்யா-உக்ரைன் போர்தான். இந்த போருக்கு இடையில் இந்தியாவின் பொருளாதாரத்தை வடிவமைப்பது மிகப்பெரிய சவால். அதை மோடி திறம்பட மேற்கொண்டு வருகிறார்.
இந்தப் போர், ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் நடந்தாலும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை பாதித்து உள்ளது. குறிப்பாக எரிசக்தி துறையை பாதித்து.. இந்தியாவின் இறக்குமதி மற்றும் பணவீக்கத்தை கணிசமாகப் பாதித்துள்ளது. இதையும் மீறி பிரதமர் மோடி ராஜதந்திரமாக காய் நகர்த்தி இந்தியாவை பணவீக்க உயர்வில் இருந்து காத்து வருகிறார்.

இந்த உலகளாவிய பிரச்சனைகள் இருக்கும் சமயத்திலும், இந்தியா தொடர்ந்து இந்த போரை சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது. போர் மூலம் ஏற்படும் பொருளாதார சிக்கல்களை முறையான திட்டத்துடன் இந்தியா கையாண்டு வருகிறது . பணவீக்கம் உயர கூடாது, அதேபோல் இறக்குமதி சங்கிலி நிற்க கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது. மோடி அரசின் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டதோடு.. எண்ணெய் விலைகளை ஒப்பீட்டளவில் நிலையானதாக உள்ளது.
ரஷ்யா-உக்ரைன் மோதல்: உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்தது எப்படி?
பிப்ரவரி 2022 இல் வெடித்த ரஷ்யா-உக்ரைன் போர், உலகளாவிய வர்த்தகத்தில், குறிப்பாக எண்ணெய், எரிவாயு, கோதுமை மற்றும் உரம் விற்பனை ஆகியவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். மேற்கத்திய நாடுகள் அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்ததால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ரஷ்யாவின் எரிசக்தியை அதிகம் நம்பியிருக்கும் ஐரோப்பிய நாடுகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டன. உலகளவில் தேவை அதிகரித்த நிலையில், ஐரோப்பிய நாடுகள் தங்கள் எண்ணெய் விலைகளை உயர்த்தி மக்களை அவதிக்கு உள்ளாக்கின. கிட்டத்தட்ட 80% கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவிற்கு, இந்த இடையூறால் கடுமையான பொருளாதார அச்சுறுத்தல் ஏற்பட்டது. ஆனால் இந்தியா இதை திறம்பட கையாண்டது.
போரினால் ஏற்பட்ட சவால்களை இந்தியா திறமையாகக் எதிர்கொண்டு வருகிறது. உலகளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்தாலும், விலை உயர்வின் முழு தாக்கமும் இந்தியாவிற்கு வரவில்லை. தள்ளுபடியில் ரஷ்ய எண்ணெயை இந்தியா பெற முடிந்தது.
மேற்கு நாடுகளுடனான உறவை பேணும் அதே வேளையில்.. ரஷ்யாவுடன் நட்பாக இருந்து இந்தியா எண்ணெயை வாங்கியது. சிறப்பாக.. ராஜதந்திர ரீதியாக செயல்பட்டு அமெரிக்காவையும் பகைக்காமல்.. அதே சமயம் ரஷ்யாவிடமும் நட்பு பாராட்டி இந்தியா பலன்களை அனுபவித்தது. மற்ற நாடுகளில் எரிபொருள் விலை உயரும் போது இந்தியாவிற்குள் அந்த உயர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள இது முக்கிய காரணமாக அமைந்தது.
உலகளாவிய நிலையற்ற தன்மை: இந்தியா எப்படி எண்ணெய் விலைகளை கட்டுக்குள் வைத்தது?"
ரஷ்யா - உக்ரைன் போரின் மிகக் கடுமையான விளைவுகளில் ஒன்று, உலகளாவிய எண்ணெய் விலைகளில் ஏற்ற இறக்கம் ஆகும். இதன் காரணமாக ஒரு பீப்பாய்க்கு $70 முதல் $120 வரையிலான ஏற்ற இறக்கம் ஏற்பட்டது. இத்தகைய விலை ஏற்றத்தாழ்வுகள், எரிபொருள் இறக்குமதியை அதிக அளவில் பாதிக்கும்.
இதன் காரணமாக இந்தியாவில் கடுமையான பணவீக்கம் ஏற்பட்டு இருக்கும். எரிபொருள் விலை உயர்வு போக்குவரத்து செலவுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இது உற்பத்தி முதல் விவசாயம் வரை கிட்டத்தட்ட அனைத்து துறைகளையும் பாதிக்கும். விலைவாசி உயரும்.
இருப்பினும், தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கான இந்தியாவின் மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கைகள்.. இவை அனைத்தையும் தடுத்து இந்தியாவை காப்பாற்றியது. முறையாக காய் நகர்த்தி ரஷ்யாவிடம் உரிய நேரத்தில் இந்தியா எண்ணெய் வாங்கியதன் மூலம் இந்தியாவில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எண்ணெயை குறைந்த விலைக்கு வாங்கி இந்தியா உலக நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்துள்ளது . போரின் காரணமாக உலக நாடுகள் கடுமையாக பாதிக்கும் நிலையில்தான்.. இந்தியா மட்டும் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது.
மேலும், இந்திய அரசு பல்வேறு எரிபொருள் மானியங்களை அறிமுகப்படுத்தி, நுகர்வோர் மீதான சுமையை குறைத்தது. இந்த மானியங்கள் மற்ற நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டிய நிதி என்றாலும் கூட.. மத்திய அரசு துணிச்சலாக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. மில்லியன் கணக்கான இந்திய குடும்பங்களை எரிபொருளை நம்பி இருப்பதால்.. அவர்களுக்காக பெட்ரோல் டீசல் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டது. பொருளாதார ரீதியாக சவாலானதாக இருந்தாலும் மோடி மேற்கொண்ட துணிச்சலான நடவடிக்கைகள் பல லட்சம் இந்திய குடும்பங்களை காத்தது.












Click it and Unblock the Notifications