கெஜ்ரிவால் பதவி விலகிய ரகசியம்? 13 வருட ஆட்சியில் 75 ஆயிரம் கோடி? அதிஷியின் பின்புலம் தெரியுமா?
சென்னை: டெல்லி முதலமைச்சராக அதிஷி கடந்த சனிக்கிழமை பதவியேற்றுள்ள நிலையில், அவரது தலைமையிலான ஆட்சி எப்படி இருக்கும்? ஆம் ஆத்மி கட்சிக்கு இது பின்னடைவாக மாறுமா என்பது பற்றி டெல்லி வட்டார தகவல்கள் என்ன சொல்கின்றன என்பது குறித்து தெரியவந்துள்ளது.
தலைநகர் டெல்லியின் முதல்வராக அதிஷி மீண்டும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் அவரது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தது பலரும் எதிர்பார்க்காத அதிரடியான திருப்பம் என்று சொல்லப்படுகிறது. கலால் கொள்கைகளை வகுப்பதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கெஜ்ரிவால், கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். அவருக்கு தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வாய்ப்பு தராமல் பாஜக இதைச் செய்துள்ளது ஜனநாயக விரோதம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தன. அதனைத் தொடர்ந்து தேர்தல் பரப்புரையின் இறுதிக்கட்டத்தில் ஜாமினில் வெளியே வந்தார் கெஜ்ரிவால்

அதன் பின்னர் மோடியின் வயது வரம்பைச் சுட்டிக்காட்டி அவர் வரும் 5 ஆண்டுகளில் முதல்வராக தொடர முடியாது. அது பாஜக கொள்கைக்கு விரோதமாக இருக்கும் என்று ஒரு திரியைக் கொளுத்திப் போட்டார். அது மிகப்பெரிய விவாதமாக மாறியது. அதற்கு பிரதமராக 5 ஆண்டுகள் வரை மோடியே தொடர்வார் என அமித்ஷா விளக்கம் அளித்தார். கெஜ்ரிவாலின் ஜாமின் காலம் முடிவடைந்த நிலையில் அவர் மீண்டும் சிறைக்குச் சென்றார்.
கடந்த வாரம் மறுபடியும் அவருக்கு ஜாமின் கிடைத்தது. வெளியே வந்த 2 நாட்களில் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். அவருக்குப் பதிலாக அதிஷி அந்தப் பதவியை ஏற்றுள்ளார். இதனால் ஆம் ஆத்மி கட்சியின் எதிர்காலத்தில் ஒரு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதைப் பற்றி டெல்லி மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் ஒரு யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர், "அன்னா ஹசாரேவை வைத்து இந்திய அரசியலில் ஊழல் அதிகரித்துவிட்டதாக ஒரு போராட்டத்தை 2011இல் தொடங்கினார்கள். அதில் ஒரு அங்கமாக இருந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். அதில் கிடைத்த புகழை வைத்து அரசியல் கட்சியை தொடங்கி ஆட்சிக்கு வந்தவர். ஆனால், 13 ஆண்டுகளில் இவர் 75 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். லண்டன், ஆஸ்திரேலியா, துபாய் ஆகிய பல நாடுகளிலிருந்து அவருக்குப் பணம் வருவதாகச் சொல்கிறார்கள். அதில் முறைகேடுகள் நடந்துள்ளன என்றும் சொல்கிறார்கள்.
மோடியை எதிர்ப்பதை மட்டுமே அரசியலாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். டெல்லியில் தெருவுக்கு ஒரு கிளினிக் திறப்பேன் என்றார். ஆனால், இதுவரை அதை செய்யவே இல்லை. ஆட்சிக்கு வந்த முதல் 5 வருடங்கள் மிகச் சிறப்பாகத் திட்டங்களைச் செயல்படுத்தினார். ஆட்சிக்கு நல்ல பெயரை உண்டாக்கினார். அடுத்ததாக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது சாராய ஊழலில் சிக்கிக் கொண்டார். 5 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

சட்டப்படி 18 வயதுக்கு மேல் தான் மது அருந்த முடியும் என்ற நிலை இருந்தது. அதை 12 வயதாகக் குறைக்க வழிவகை செய்ய முயன்றார் கெஜ்ரிவால். கல்லூரிகள் பக்கத்திலேயே மதுபானக் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளார். சந்திரசேகர ராவ் மகளைக் கைது செய்து, அவர் மூலமாக 100 கோடி ரூபாய் பெற்று, அந்தப் பணத்தை வைத்து கோவா, பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய சட்டசபைத் தேர்தல்களில் செலவு செய்துள்ளார் என்பதை உச்சநீதிமன்றமே ஏற்றுக்கொண்டுள்ளது. அதன் மூலம் அவர் சட்டத்தின் பிடியில் சரியாகச் சிக்கிக் கொண்டுள்ளார்.
தன் மீது வழக்குகள் உள்ளதால், தன் மனைவியை முதல்வராக்க முயன்றார். ஆனால், அது நடக்கவில்லை. ஜெயலலிதா வழக்குக்கும் கெஜ்ரிவால் வழக்குக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. ஜெயலலிதா ஊழல் வழக்கிலிருந்து ஜாமின் பெற்றார். அதன்பின்னர் 6 வருடங்கள் கழித்து சிறைக்குச் சென்றார். அதைப்போல இன்று ஜாமின் பெற்றாலும் ஒருநாள் அவர் சிறைக்குப் போவார். அது உறுதி என்றே சொல்வேன்.
அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கண்ணாடி மாளிகையைக் கட்டி இருக்கிறார். அதற்காக 140 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். அவர் வீட்டுக் கழிவறை மட்டுமே ஒன்றரைக் கோடிக்குக் கட்டப்பட்டுள்ளது. அதை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அப்படியே படம்பிடித்து வெளியிட்டுள்ளது. இந்த வீட்டின் மூலம்தான் கெஜ்ரிவாலின் இறங்கு முகம் தொடங்கியுள்ளது. இப்போது அந்த வீட்டில் அவர் இல்லை.
இதை எல்லாம் உணர்ந்துதான் இப்போது அதிஷியை டெல்லி முதல்வர் நாற்காலியில் அமரவைத்துள்ளார் கெஜ்ரிவால். டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சர் இவர். முன்னதாக ஷீலா தீட்சித், சுஷ்மா சுராஜ் ஆகிய இருவரும் இருந்துள்ளனர். அதிஷியின் அம்மா, அப்பா இருவரும் வழக்கறிஞர்கள். இவரது பெற்றோர்தான் அப்சல் குருவுக்கு வழக்கறிஞராக இருந்தவர்கள். அவரை தூக்கிலிடக் கூடாது என வழக்கு நடத்தினார்கள். இப்போது இது ஒரு சர்ச்சையாகி இருக்கிறது. பாஜகவுக்கு இந்த விவகாரம் லட்டு மாதிரி கைக்குக் கிடைத்துள்ளது என்று நான் கருதுகிறேன்.
இதை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வரப்போகும் 2025 சட்டமன்றத் தேர்தலில் கெஜ்ரிவால் வெற்றி பெறுவது மிகக் கடினம். கடந்த முறை 70க்கு 67 இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றியது. வரும் தேர்தலில் 40 தொகுதிகளைக் கூட ஆம் ஆத்மி பெறாது. அரவிந்த் கெஜ்ரிவால் மீது புகார் கொடுத்ததே காங்கிரஸ் கட்சிதான். அதன் பேரில்தான் சிபிஐ வழக்கே நடந்து வருகிறது. ஷீலா தீட்சித் மகன் சந்தீப் தீட்சித் ஆம் ஆத்மியை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால், ராகுல் காந்தி ஆம் ஆத்மியுடன் கூட்டணி வேண்டும் எனச் சொல்கிறார். அது என்ன ஆகும் என்பது 2025 தேர்தல் களம்தான் முடிவு செய்யும்.
வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களைப் பிடிக்கும் என சிலர் கருத்துக் கணிப்பை வெளியிடுகின்றனர். அதை அப்படியே நாம் நம்ப வேண்டாம். ஆனால், தேர்தல் களம் இப்போதே சூடு பிடித்துவிட்டது என்பது உண்மை. பிப்ரவரி 2025 வரை அதிஷி ஒரு தற்காலிக முதல்வராகச் செயல்படுவார். ரப்பர் ஸ்டாம்பு முதல்வராக இருப்பார். அவர் வெளிநாட்டில் படித்துவிட்டு வந்தவர். இவர் முழுப் பெயர் அதிஷி மெர்லினா சிங். இவர் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தைப் பின்புலமாகக் கொண்டவர். ஆக, எந்தப் பக்கம் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் எதிர்காலத்தைக் கணித்துப் பார்த்தாலும் அது கண்ணுக்கு எட்டியவரை இருண்ட காலமாகவே தெரிகிறது" என்று பேசி இருக்கிறார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications