முதல் ரகசியத்தை விஜய் கிட்ட சொன்ன செங்கோட்டையன்.. என்ன தெரியுமா? கொங்கு மண்ணில் தவெக தரும் ட்விஸ்ட்
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சுங்கச்சாவடி சரளையில் விஜயபுரி அம்மன் கோவில் திடலில் நாளை நடைபெற உள்ளது.. இதற்கான விறுவிறு நடவடிக்கைகள், முன்னேற்பாடுகள் மூத்த தலைவர் செங்கோட்டையன் தலைமையில் நடந்து கொண்டிருக்கின்றன.. இந்நிலையில் தவெக குறித்த சில தகவல்கள் இணையத்தில் வட்டமடித்து வருகின்றன.
தவெகவுடன் கூட்டணி வைக்க நிறையவே ஆசைப்பட்டார் எடப்பாடி பழனிசாமி.. ஆனால், விஜய் அதிமுகவுக்கான கூட்டணி கதவை அடைத்துவிட்டது போல பேசி வருகிறார்.. மேலும் செங்கோட்டையனும் விஜய்யிடம் இருப்பதால் தவெகவுடனான கூட்டணிக்கு அதிமுகவுக்கு இனி வாய்ப்பேயில்லை என்றே தெரியவருகிறது.

செங்கோட்டையன் - அதிமுக
மேலும், எடப்பாடியுடன் இப்போதைக்கு கீழ் நிலை நிர்வாகிகள்தான் உடனிருக்கிறார்களாம்.. இடைநிலை தலைவர்களில் பலர் எடப்பாடி மீது அதிருப்தியில் உள்ளார்களாம்.. எனவே இவர்கள் எப்போது வேண்டுமானாலும் செங்கோட்டையனுடன் செல்லலாம் என்று கூறப்படுகிறது..
செங்கோட்டையன் தவெகவுக்கு சென்றிருப்பது அக்கட்சிக்கு பெரிய அளவில் உதவும் என்றே கணிக்கப்பட்டு வருகிறது.. காரணம், தேர்தல் என்றாலே அதிமுக, திமுகவின் வியூகங்கள் எப்படி இருக்கும்? பிரச்சாரங்கள் எப்படி இருக்கும்? என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதிகள் எப்படி இருக்கும்? என்பதெல்லாம் செங்கோட்டையனுக்கு நன்றாகவே தெரியும். எனவே, திராவிட கட்சிகளுக்கு இணையான வியூகத்தை தவெகவுக்கு செங்கோட்டையனால் வகுத்து தர முடியும் என்றே தெரிகிறது.
ஈரோடு தவெக விஜய்
எந்தவிதமான அரசியல் அனுபவமும் இல்லாமல் தத்தளித்து கொண்டிருக்கிற விஜய் கட்சியை ஒழுங்குப்படுத்தவும், நெறிப்படுத்தவும், அனுபவசாலியான செங்கோட்டையனால் தவெகவுக்கு பலமும், பயனும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை..
குறிப்பாக தன்னுடைய ரசிகர்களை அரசியல்படுத்த, நெறிப்படுத்த செங்கோட்டையனின் அனுபவம் நிறையவே விஜய்க்கு உதவக்கூடும்.. இதனால் செங்கோட்டையனுக்கு நஷ்டம் ஏற்படலாம் என்றாலும் விஜய்க்கு பலமாகவே கருதப்படுகிறது.
மக்கள் சந்திப்பு
அதற்கேற்றவாறு, விஜய்யை முதல்வராக்குவேன் என தவெக நிர்வாக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனும் உறுதி கூறியுள்ளார்... செங்கோட்டையன் வகுக்கும் பாதையில்தான் விஜயின் அரசியல் பயணம் செல்லும் என்று புஸ்ஸி ஆனந்த்தும் அறிவித்துள்ளார்..
இப்போது விஷயம் என்னவென்றால், விஜய் ஆலோசனையின் பேரில், கொங்கு மண்டலத்தில் மக்கள் அனைவருக்கும் தகவல் பரிமாறும் வகையில் ஈரோட்டில் "மக்கள் சந்திப்பு" நடத்தப்படுகிறது. இதன் நோக்கம், கூட்டத்தில் எந்த விதமான குழப்பமும், குழப்பம் அல்லது கலக்கமும் இல்லாமல், அனைத்தும் அமைதியாக நடக்கவேண்டும் என்பதுதான்.
செங்கோட்டையன், தனது அனுபவத்தை பயன்படுத்தி, இந்த கூட்டத்தை நன்றாக திட்டமிட்டுள்ளாராம்.. சின்ன சிக்கலும், சிக்கலான நிகழ்வும் ஏற்படாமல், அனைவரும் பாதுகாப்பாக கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்துள்ளார்.
வியூகங்கள், திட்டங்கள்
விஜயின் தேர்தல் பயண திட்டங்கள், மாவட்ட சுற்றுப்பயணங்கள், சிறுபான்மையினர் ஆதரவு வலுப்படுத்தல் உள்ளிட்ட முழு பொறுப்புகள் செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அதேபோல ஈரோட்டில் 10 நிமிடம், 20 நிமிடம் என்றில்லாமல் குறைந்தது அரை மணி நேரம் உரையாற்ற வேண்டும் என்று விஜய்க்கு செங்கோட்டையன் அறிவுறுத்தியிருக்கிறாராம்.
முதல் ரகசியம்
அதுமட்டுமல்ல, விஜயிடம் ஒரு முக்கியமான விஷயத்தை செங்கோட்டையன் பகிர்ந்துள்ளாராம்..
அதாவது தவெக வாக்கு வங்கி 28 சதவிகிதம் என கணிக்கப்படுகிறது. இன்னும் 10 சதவிகிதத்தை நோக்கி உழைத்தால் மாபெரும் வெற்றி கிடைக்கும்.. 18 வயதிலிருந்து 40 வயது வரையுள்ளோரின் ஆதரவு அதிகமாக உள்ளதால் அதை இன்னும் விரிவுபடுத்தி 90 வயதுவரை இருப்பவர்களின் ஆதரவையும் பெற வேண்டும் என்று விஜய்க்கு அறிவுறுத்தி உள்ளாராம்.
முக்கிய பிரபலங்கள் யார்
இதற்கு நடுவில், விஜய் ஈரோட்டுக்கு வரும்போது, சில முக்கிய நிர்வாகிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும், இதற்காக மாற்று கட்சியில் உள்ளவர்களிடம் செங்கோட்டையன் அமைதியாக பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது..
ஆனால், அவர்கள் யார், எந்த கட்சியில் இருந்து வரப்போகிறார்கள் என்பது ஈரோடு தவெக மேடையில்தான் தெரியுமாம்.. செங்கோட்டையனின் தவெக வருகையே கடைசி நேரத்தில்தான் தெரியவந்தது.. அதுபோல செங்கோட்டையன் அழைத்து வரும் முக்கிய பிரமுகர்களும் யார் என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது..
பிற கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், முன்னாள் அமைச்சர்கள் சிலர் தவெகவில் இணைய உள்ளதால், அரசியல் கட்சி வட்டாரங்களே பரபரத்து கிடக்கின்றன.
-
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்












Click it and Unblock the Notifications