சுள்ளென்று அடிக்கும் வெயிலுக்கு இதமாக ஜில்லென்று பெய்யும் மழை..வானிலையில் கூல் அறிவிப்பு
தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுதினம் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் நாளை மற்றும் நாளை மறுதினம் தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.

நாளை மற்றும் நாளை மறுதினம் தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 2,3ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாசி மாதம் பகல் நேரங்களில் அதிக வெயிலும் இரவு நேரங்களிலும் அதிகாலை நேரத்திலும் அதிக குளிரும் நிலவி வருகிறது. இந்த நிலையில் தகிக்கும் வெப்பத்திற்கு இதமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஜில் அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் மக்கள் இப்போதே மழையை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.












Click it and Unblock the Notifications