சென்னை டூ டெல்லிக்கு 45 நிமிடங்கள்! உலகின் மிக வேகமான விமான சேவை முடிவுக்கு வந்தது இப்படித்தான்
சென்னை: உலகின் மிக விரைவான போக்குவரத்து சேவை என்றால், விமான போக்குவரத்தைதான் சொல்லுவோம். ஆனால் அந்த விமான போக்குவரத்திலேயே மிக விரைவான விமான சேவை ஒன்று இருந்தது. இதன் மூலம் உலகின் எந்த மூலைக்கும் அதிகபட்சமாக 4 மணி நேரத்திற்குள் சென்றுவிட முடியும். ஆனால் இந்த அதிவேக விமானம் தற்போது பயன்பாட்டில் இல்லை.
கற்கால மனிதர்களின் கண்டுபிடிப்புகளில் மிகவும் அற்புதமானது என்றால் அது சக்கரம்தான். இதே நாகரிக மனிதர்களின் அற்புதமான கண்டுபிடிப்பு எனில் அது விமானம் என்று சொல்லலாம். மனிதர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல நாள் கணக்கில் நேரம் செலவானதை விமானங்கள் அப்படியே சில மணி நேரங்களாக குறைத்தது. வானத்தில் அதுவரை பறவைகளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த சாமானிய மனிதர்களுக்கு ஒரு உலோக உருண்டை விமானம் என்கிற பெயரில் பறப்பதை நம்பவே முடியவில்லை.

விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது அது குறைவான உயரத்தில்தான் பறந்தன. ஆனால் பின்னர் வந்த விஞ்ஞானிகள் விமானங்களின் டிசைனை மாற்றி அதை சூப்பர் விமானங்களாக உருவாக்கினர். இப்படியாக பயணிகள் விமானங்கள் சூப்பர் விமானங்களாக பரிணமித்தன. இந்த விமானங்கள் நாம் போக நினைக்கும் இடங்களுக்கு சில மணி நேரத்தில் கொண்டு சென்றுவிடுகின்றன. ஆனால் நமது தலைமுறைக்கு முன்னர் இதைவிட வேகமான விமான சேவை இருந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
அப்படியெனில் டெக்னாலஜி வளர்ந்த இந்த காலத்தில் ஏன் அந்த விமானங்கள் இருக்கவில்லை என்று கேள்வி எழுவது இயல்புதான். தற்போது சென்னையிலிருந்து டெல்லி போக வேண்டும் எனில் 2 மணி நேரத்திலிருந்து 2.30 மணி நேரம் வரை ஆகிறது. அதாவது பயணிகள் விமானம் மணிக்கு 500-960 கி.மீ வேகத்தில் பயணிக்கும். இதே முன்பு பயன்பாட்டில் இருந்த விமானம் எனில் அது வெறும் முக்கால் மணி நேரத்தில் டெல்லியை அடைந்திருக்கும்.
அதாவது பழங்காலத்திலிருந்து வந்த சூப்பர் விமானங்களை, சோவியத் ரஷ்யா சூப்பர் சோனிக் விமானங்களாக மாற்றியது. அப்போது சோவியத் ரஷ்யா அறிவியல் கண்டுபிடிப்புகளில் பீக்கில் இருந்த காலம். ராக்கெட் உற்பத்தி, விண்வெளி பயணம் என கலக்கிக்கொண்டிருந்தது. இந்த கண்டுபிடிப்புகளின் ஒரு பகுதியாகதான் டுபோலேவ் -Tu144 எனும் சூப்பர் சோனிக் விமானத்தை கண்டுபிடித்தது. சூப்பர்சோனிக் விமானங்கள் ஒலியை விட வேகமாக செல்லும்.
டுபோலேவ் -Tu144 என பெயரிடப்பட்ட இந்த விமானம் மாக்-2 வேகத்தில் பயணிக்கும். அதாவது ஒலி ஒரு மணி நேரத்திற்கு 1,235 கி.மீ வேகத்தில் பயணிக்கும். இதை மாக் -1 என்று அழைப்பார்கள். மாக் -2 வேகம் எனில் 2470 கி.மீ வேகம். டுபோலேவ் -Tu144 விமானம் மாக்-2 வேகத்தையும் கடந்து பயணித்தது. எல்லாவற்றையும் விட இது ஒரு பயணிகள் விமானம் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். உலகின் மாக்-2 வேகத்தை எட்டிய முதல் பயணிகள் விமானம் இதுதான்.
எந்த அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றதோ அதே அளவுக்கு அது சீக்கிரமாகவே சேவையிலிருந்து விடைபெற்றது. காரணம் 1973ம் ஆண்டு பாரிஸ் விமான கண்காட்சியில் ஏற்பட்ட விபத்துதான். இந்த விமானத்திற்கு போட்டியாக பிரிட்டன்-பிரஞ்சு நாடுகள் சேர்ந்து 'கான்கார்டு' எனும் விமானத்தை களத்தில் இறக்கின. இதுவும் மணிக்கு 2,000 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. ஆனால் Tu144 விமானத்தின் வேகத்தை தொட முடியவில்லை.
பாரிஸ் கண்காட்சியில் இரண்டு விமானங்களுக்கும் போட்டி உருவானது. அப்போது Tu144 விமானிகள் சாகசம் செய்ய முயன்றபோது அது விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 6 பேரும், தரையில் 8 பேரும் உயிரிழந்தனர். அத்துடன் Tu144 விமானத்தின் கதை முடிவுக்கு வந்துவிட்டது. இந்த விமானத்தை கட்டுப்படுத்த அசாத்திய திறன் தேவைப்பட்டது. இதில் பயணிப்பது காஸ்ட்லியும் கூட.
எனவே மக்களிடம் பயம் அதிகமாகி இதற்கான வரவேற்பு குறைந்ததால் இந்த விமான பயன்பாடு அப்படியே நிறுத்தப்பட்டுவிட்டது. இதனை தொடர்ந்து கான்கார்டு விமானமும் சில காலம் மட்டும் பயன்பாட்டில் இருந்தது. பின்னர் ஏற்பட்ட பெரும் விபத்தையடுத்து அதுவும் சேவையிலிருந்து விடைபெற்றது. பயணம் என்பது நேரத்தை குறைப்பதை விட பாதுகாப்பாக அமைவதைதான் மக்கள் விரும்புகின்றனர். இப்படியாக உலகின் மிக அதிவேக விமான சேவை முடிவுக்கு வந்தன.












Click it and Unblock the Notifications