உடனடியாக போராட்டம் வாபஸ் இல்லை: இதையெல்லாம் செய்யவேண்டும்:பட்டியலிடும் பஞ்சாப் விவசாயி கோல்டன் சிங்
நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும், 750 விவசாயிகள் இறந்துள்ளனர், லக்கிம்பூரில் விவசாயிகள் உயிர் தியாகம் செய்துள்ளனர் அதெற்கெல்லாம் தீர்வு கிடைக்காமல் போராட்டம் முடியாது, பிரதமரின் ரூ.15 லட்சம் அறிவிப்ப்ய், புல்லட் ட்ரெய்ன் அறிவிப்பு போல் இதையும் அறிவிப்பாக போக விட மாட்டோம் என பஞ்சாப் விவசாயி ராஜீந்தர் சிங் கோல்டன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் பஞ்சாபி ரஜீந்தர் சிங் கோல்டன்
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக நேற்று காலை அறிவித்த நிலையில் அதுதொடர்பாக பஞ்சாபைச் சேர்ந்த தமிழ் பேசும் விவசாயி ராஜீந்தர் சிங் பிரதமரின் அறிவிப்பு குறித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பஞ்சாப் தேர்தலையொட்டி அறிவிப்பு
ஆனால் அதே நேரத்தில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கின்றனர் பஞ்சாப் உள்ளிட்ட சட்டப்பேரவைத்தேர்தலை மனதில் வைத்து பிரதமர் நரேந்திர மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டால் அது கண்டிக்கத்தக்கது.

750 விவசாயிகள் இறந்தப்பின் அறிவித்தது மனதுக்கு கஷ்டம்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக களத்தில் போராடி 750 விவசாயிகள் உயிரிழந்த பிறகு சட்டத்தைத் திரும்பப் பெற உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது மன உளைச்சலாக உள்ளது. 19 பேர் உயிரிழந்தபோதே வாபஸ் வாங்கியிருந்தால் மனதார அவர்கள் உயிரிழப்புக்காக வாபஸ் வாங்குகிறார் என்று நினைக்கலாம், ஆனால் 750 விவசாயிகள் இறந்தப்பின் தற்போது வாபஸ் வாங்கியிருப்பது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.

750 விவசாயிகள் உயிரிழப்பு தீர்வு என்ன? லக்கிம்பூர் தியாகிகளுக்கும் தீர்வு வேண்டும்
இந்த அறிவிப்பை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றி மசோதாவை திரும்ப பெற வேண்டும். அதே நேரத்தில் கோதுமை அரிசி உள்ளிட்ட பயிர்களுக்கு எம்.எஸ்.பி. விலை நிர்ணயம் முழுமையாக செய்யப்பட்ட பிறகு எங்களுடைய போராட்டம் நிறைவு பெறும். லக்கிம்பூர் கேரியில் 5 விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் தியாகிகள். அதையெல்லாம் ஒதுக்கி வைக்க முடியாது. வேளாண் போராட்டத்தில் 13 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர், உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களுடைய இழப்புக்கு உரிய நிவாரணம் வேண்டும். அவர்கள் மரணத்துக்கு எல்லாம் நியாயம் கிடைத்தப்பின்னரே இப்போராட்டம் நிறைவுப்பெறும்.

தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்த பஞ்சாப் விவசாயிகள்
இருந்தாலும் இச்சட்டங்களை வாபஸ் பெற்றதற்கு மிகுந்த சந்தோஷம். தமிழக மக்களுக்கு மிகவும் நன்றி. எங்கள் போராட்டத்துக்கு பக்கத்துணையாக நின்றதற்கு தமிழக மக்களுக்கு நன்றி" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications