மின் கட்டணம்.. தமிழ்நாடு மின்சார வாரியமே ஆச்சரியப்படும் அளவிற்கு நடந்த மாற்றம்.. குவிந்த கோடிகள்
சென்னை: கடந்த ஏப்ரல் மாதம் வரை 70 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தை செலுத்தி உள்ளார்கள். கடந்த ஆண்டு மின்கட்டணமாக ரூ.1,550 கோடி வசூல் ஆகி உள்ளதாகவும், இந்த ஆண்டு ரூ.2,010 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுவாக வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு எடுக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை நுகர்வோர், அவர்கள் வீட்டில் வைக்கப்பட்டுள்ள மின் அட்டையின் மூலம் அறிவார்கள். அந்த அட்டையை எடுத்துக் கொண்டு மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரில் சென்று மின் கட்டணத்தை கட்டி வந்தனர்.

ஆனால் கடந்த 10 வருடங்களில் மின் கட்டணம் செலுத்தும் முறையில் மிகப்பெரிய மாற்றம் நடந்துள்ளது. குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆப் வழியாகவும், டிஜிட்டல் வழியாகவும் மின் கட்டணம் செலுத்துவது அதிகரித்துள்ளது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் திட்டத்தால், மின் கட்டணத்தை செலுத்த அலுவலகம் செல்ல தேவையில்லை.. ஒரு நாள் வேலைக்கு லீவு போட தேவையில்லை.. அலைச்சல் இல்லை.. ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவதால் பல்வேறு யுபிஐ தளங்கள் சலுகையும் தருகின்றன.
இதன் காரணமாக மின்கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வரை 70 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தை செலுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேரில் அல்லது இணையதளம் வழியாக மட்டுமே மின் கட்டணம் செலுத்த முடியும் என்கிற நிலை கடந்த சிலஆண்டுகளில் மெல்ல மெல்ல மாறியது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் கடந்த சில வருடங்களில் அறிமுகம் செய்தது. இதன்படி, நுகர்வோர்கள் கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான், பாரத்பே உள்ளிட்ட பல்வேறு யுபிஐ ஆப்கள் வழியாக செலுத்தலாம். மின் கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டாலே யுபிஐக்கள் மின் கட்டணத்தை அலார்ட் செய்கின்றன.
இதனால் மின்கட்டணம் செலுத்த மின்நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதன்படியே ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் வரை 57.25 லட்சம் மின்நுகர்வோர் ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தைச் செலுத்தி உள்ளார்கள். இந்நிலையில், நடப்பு ஆண்டு 2024 ஏப்ரல் வரை 70.20 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தி உள்ளார்கள். இதேபோல், கடந்த ஆண்டு மின்கட்டணமாக ரூ.1,550 கோடி வசூல் ஆனது. இது இந்த ஆண்டு ரூ.2,010 கோடியாக அதிகரித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி,கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் மின் நுகர்வோர் அதிகளவில் மின்கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி இருக்கிறார்கள். ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவதையும், வாட்ஸ் அப் வழியாக மின் கட்டணம் செலுத்துவதையும் மின் வாரியம் ஊக்குவித்து வருகிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications