சவுக்கு சங்கர் மீதான 2வது குண்டர் தடுப்பு சட்டம் ரத்து! திரும்ப பெற்ற தமிழக அரசு! விரைவில் விடுதலை?
சென்னை : பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது இரண்டாவதாக போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை திரும்ப பெறுவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கரின் தாயார் தொடர்ந்த வழக்கின் விசாரணையின் போது தமிழக அரசு இதனை தெரிவித்த நிலையில், சவுக்கு சங்கர் விரைவில் விடுதலையாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

சவுக்கு சங்கர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தேனி சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் கோவை அழைத்து சென்றனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சவுக்கு சங்கர் மீது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின. இதனையடுத்து சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்த நிலையில் சங்கர் மீதான பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து சவுக்கு சங்கர் விரைவில் சிறையில் இருந்து வெளி வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தேனியில் இருந்த சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்த சென்ற போது அவரிடம் கஞ்சா இருந்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக தேனி போலீசார் தனியாக வழக்கு பதிவு செய்து கஞ்சா வழக்கிலும் சவுக்கு சங்கரை கைது செய்தனர். அந்த சவுக்கு சங்கர் மீது குண்டார் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது தேனி மாவட்ட காவல்துறை. இதற்கான பரிந்துரையை தேனி எஸ்பி வழங்கியுள்ள நிலையில் ஒப்புதல் அளித்தார் தேனி மாவட்ட ஆட்சியர்.
இதை அடுத்து இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் எந்தவித காரணமும் இன்றி இரண்டாவது முறையாக சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் தாயார் தரப்பில் வாதிடப்பட்டது. அதே நேரத்தில் சவுக்கு சங்கர் மீண்டும் வெளியே வந்தால் மீண்டும் கஞ்சா விநியோகம் செய்வார் என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டதோடு, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.
இந்நிலையில் இன்று சவுக்கு சங்கர் வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை அறிவுரை கழகம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து திரும்பப் பெறுவதாக தமிழக அரசு தெரிவித்தது. இதனை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சவுக்கு சங்கரின் தாயார் தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர். இதன் காரணமாக சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர், பிற வழக்குகளில் ஜாமீன் கிடைத்தால் விரைவில் விடுதலை ஆகலாம் என கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications