சல்லி சல்லியாக நொறுங்கிய பாஜக? காலை வாரிய மூன்று மாநிலங்கள்! வெறுப்பு அரசியல் தந்த அடி!
சென்னை: மூன்று மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் அக்கட்சியின் கோட்டைகளாக நம்பப்பட்டு வந்த கருத்தின் மீது சரியான அடி விழுந்துள்ளது.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 400 மேலான தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று ஒரு பிம்பத்தை ஆரம்பம் முதலே கட்டமைத்து வந்தது. இதனை மோடி உட்பட பாஜக தலைவர்கள் பலர் மந்திரச் சொல் போலப் பொதுக்கூட்டம் போடும் இடங்களில் எல்லாம் பேசி வந்தனர்.

ஆனால், அந்தக் கட்சி 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெறவைத்து அதன் தேசிய தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர் வாக்காள பெருமக்கள்.
இந்தக் கட்சி மொத்தம் 36.56% வாக்குகளைப் பெற்றுள்ளது என்றும் மொத்தம் 235,973,935 வாக்குகளைப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை இந்தக் கட்சி மூன்றாவது முறையாகப் பெற்றிருந்தாலும், அதைக் கொண்டாடும் அளவுக்கு அதிகப்படியாகத் தொகுதிகள் கிடைக்கவில்லை என்ற வருத்தம் அக்கட்சித் தலைவர்கள் மத்தியில் நிலவுகிறது.
கேரளாவில் புதியதாக பாஜக கணக்கைத் தொடங்கியுள்ளது, ஒடிசாவில் 25 ஆண்டு கால நவீன் பட்நாயக் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து மாநிலத்தில் புதியதாக ஆட்சியைப் பிடித்துள்ளது என சில சாதகமான முடிவுகளை பாஜக பெற்றிருந்தாலும், சில கசப்பான செய்தியையும் இந்தத் தேர்தல் கொடுத்துள்ளது.

குறிப்பாக பாஜக மூன்று மாநிலங்களில் தனது செல்வாக்கை இழந்து நிற்கிறது. அதுவும் நாட்டின் பிரதமரையே தேர்ந்தெடுக்கும் அதிகாரம் படைத்த உத்தரப் பிரதேசத்தை இக்கட்சி கை நழுவ விட்டுள்ளது.
அந்த மாநிலங்கள் எவை?
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம் ஆகிய மூன்றும்தான். அதாவது உபியில் 2019இல் 62 தொகுதிகளை வென்றிருந்தது. இது இந்த 2024 தேர்தலில் 33 ஆகக் குறைந்துவிட்டது. இது ஒரு மோசமான பின்னடைவு.
அதே மாதிரி மகாராஷ்டிராவில் கட்சி 23 இல் இருந்து 9 ஆகச் சரிந்துள்ளது. மேற்கு வங்கத்தில் 18 இல் இருந்து 12 ஆகக் குறைந்துள்ளது. ஆக மொத்தம் இம்மூன்றையும் சேர்த்து பாஜக 54 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
கடந்த முறை இந்த மூன்று மாநிலங்களையும் சேர்த்து 103 தொகுதிகளை பாஜக வென்றிருந்தது. அந்த நிலை அப்படியே சரிந்து பாதிக்குப் பாதி இந்த முறை குறைந்துள்ளது. வெறும் 54 என்பது வெறும் நம்பர் அல்ல. அது பாஜக மீதான நம்பிக்கையைச் சிதைந்து போய் உள்ளதற்கான அடையாளம்.

இந்த மூன்று மாநிலங்கள் பாஜகவின் கையைவிட்டுப் போனதற்கான காரணங்கள் என்ன? உத்தரப் பிரதேசத்தில் யோகியின் நிர்வாகம் திறமையாகச் செயல்படவில்லை. மேலும் உட்கட்சி பூசல். அடுத்தது அதீத நம்பிக்கை எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
குறிப்பாக இந்த 5 ஆண்டுகளில் சமாஜ்வாதி சரியான எதிர்க்கட்சியாக அங்கே உருவெடுத்து விஸ்வரூபம் பெற்றது. அதனுடன் காங்கிரஸ் கை கோர்த்தது மிகப்பெரிய பலமாக அமைந்துவிட்டது.
சரியாகச் சொன்னால், உபியில் பிரியங்கா காந்தி அலை வீசியது. அவர் சென்ற இடம் எல்லாம் லட்சக்கணக்கான மக்கள் அவரை வரவேற்றனர். அவரால் அமேதி தொகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட காங்கிரஸ் மீண்டு அங்கே கொடியைப் பறக்கவிட்டுள்ளது.
ஒரு பக்கம் இந்தியத் தேசிய காங்கிரசின் செயல்பாடு, இன்னொரு பக்கம் அகிலேஷ் யாதவ் முஸ்லிம் மற்றும் தலித் வாக்காளர்களை தன் பக்கம் ஒட்டு மொத்தமாக ஈர்த்தது.
மீண்டும் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தால், அரசியல் சட்டத்தையே திருத்திவிடுவார்கள். அதனால் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற வாதம் காங்கிரஸ் மட்டும் சமாஜ்வாதி கட்சிக்குச் சாதகமான முடிவுகளைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.
ஒரு பக்கம் வகுப்புவாதம் இன்னொரு பக்கம் தலித் இடஒதுக்கீட்டு அச்சம் ஆகியவைதான் பாஜக மீதான அதிருப்திக்குக் காரணம் எனச் செய்திகள் சொல்கின்றன.
இந்த மாநிலத்தில் வகுப்புவாத வெறுப்பு பிரச்சாரத்தால் பலத்தை இழந்த பாஜக மகாராஷ்டிராவில் மஹா விகாஸ் அகாதி ஆட்சிக்கு உலைவைத்ததன் மூலம் பலத்தைப் பறிகொடுத்துள்ளது.
உத்தவ் தாக்ரேவும் சரத்பவாரும் பெரும் சக்தியாக வலம் வந்த மகாராஷ்டிர அரசியலை, தலைகீழாகக் கொட்டி அக்கட்சியின் அங்கீகாரங்களைப் பறித்ததன் மூலம் பாஜக இம்மாநிலத்தில் செல்வாக்கை இழந்து நிற்கிறது. நிதின்கட்கரி போன்ற தேசிய தலைவர்கள் இம்மாநிலத்திலிருந்தும் பாஜகவை மீட்கப் போராட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதைத்தான் சரத்பவார், "உபியின் முடிவு என்பதுதான் இந்த நாட்டின் ஒட்டுமொத்த மனநிலையாக உள்ளது" என்று சூசகமாகச் சொல்லி இருக்கிறார்.
மேற்கு வங்க அரசியலில் பாஜக எத்தனை குழப்பங்களை விளைவித்து மம்தா பானர்ஜியை ஓரங்கட்ட முயற்சி செய்தாலும் அது எளிதாகக் காரியம் இல்லை என்பதை இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் படம்பிடித்துக் காட்டியுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் தெற்கு வங்காளத்தின் தனது கோட்டையை வைத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஜங்கல்மஹால் மற்றும் வடக்கு வங்காளத்தின் மேற்குப் பகுதிகளிலும் பாஜக வெற்றியை அது சேதப்படுத்தி இருக்கிறது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.
இறுதிக் கட்டமாக மீண்டும் மம்தாவின் கை இம்மாநிலத்தில் ஓங்கியுள்ளது. அவர், "பிரதமர் மோடி அனைத்து நம்பகத்தன்மையையும் இழந்துவிட்டார். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்தியா வென்றது மோடி தோற்றார்.
பிரதமர் பல கட்சிகளை உடைத்தார். இப்போது மக்கள் அவரது மன உறுதியை உடைத்துள்ளனர். மோடி இப்போது தெலுங்கு தேசம் கட்சி மற்றும் நிதீஷ் குமார்) காலில் விழுந்து ஆட்சி அமைக்க இருக்கிறார்" என்று காட்டமாக மோடியை விமர்சித்துள்ளார்.
இந்த மூன்று மாநிலங்களும் பாஜகவுக்குச் சரியான தோல்வியை அளித்துள்ளன. அதிலிருந்து பாஜக பாடம் கற்றால் வருங்காலத்தில் கட்சி பிழைக்கும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications