சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செப். முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருமழிசை சந்தை இயங்காது... காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பு

Google Oneindia Tamil News

சென்னை: செப்டம்பர் மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் திருமழிசை காய்கறி சந்தை இயங்காது என அனைத்து காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனிடையே செப்டம்பர் 28ம் தேதி முதல் மீண்டும் கோயம்பேடு சந்தை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    5 நாட்களில் தயாரான திருமழிசை தற்காலிக சந்தை 5 மாதங்களில் காலியானது - வீடியோ

    சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து பலருக்கும் கொரோனா தொற்று பரவியதால் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. அதற்கு பதில், காய்கறி சந்தை திருமழிசைக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு தான் இப்போது காய்கறி சந்தை இயங்கி வருகிறது. ஆனால் திருமழிசை காய்கறி சந்தை சென்னையில் இருந்து மிக நீண்ட தூரத்தில் இருப்பதால் மக்கள் அங்கு சென்று காய்கறி வாங்க அதிக ஆர்வம் காட்டவில்லை.

    The Tirumalisai market is closed on Sundays throughout September

    இதனிடையே தற்போது சென்னையில் ஓரளவு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வணிகர்கள் வலியுறுத்தி வந்தார்கள். இது தொடர்பாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேரில் வந்து கோயம்பேடு சந்தையை ஆய்வு செய்தார். அதன் பிறகு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் உள்ள அங்காடிகளை ஒவ்வொரு கட்டமாக திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. , அதன்படி முதல் கட்டமாக உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி வரும் 18ம் தேதி அன்று திறக்கப்படும், அதனைத்தொடர்ந்து காய்கறி மொத்த விற்பனை அங்காடி செப்டம்பர் 28ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அடிக்கடி உருமாறும் கொரோனா வைரஸ்.. புரோட்டீன் மியூட்டேஷனால் குழப்பம்.. வாக்சின் வருவது தாமதமாகும்! அடிக்கடி உருமாறும் கொரோனா வைரஸ்.. புரோட்டீன் மியூட்டேஷனால் குழப்பம்.. வாக்சின் வருவது தாமதமாகும்!

    இந்நிலையில் திருமழிசையில் காய்கறி சந்தை வரும் செப்டம்பர் மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது என அனைத்து காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    English summary
    The Federation of All Vegetable Associations has announced that the Thirumalisai Vegetable Market will not be open on all Sundays throughout September. Meanwhile, it has been announced that the koyambedu market will be operational again from September 28.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X