மகாபலிபுரம் லாட்ஜில் சங்கீதா.. யாருமே எதிர்ப்பார்க்காத நாடகம்.. தோண்ட தோண்ட கிளம்பிய பூதம்
சென்னை: காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பாதுகாவலராக வேலை செய்து வந்த சங்கீதா, தனது கள்ளக்காதலன் ஜெயராஜுடன் சேர்ந்து மோட்டார் சைக்களில் மகாபலிபுரம் வந்துள்ளார். அங்கு அறை எடுத்து தங்கிய போது, காதலன் ஜெயராஜ் சாப்பாடு வாங்க சென்றாராம்.. அப்போது சங்கீதா கதவை திறக்கவே இல்லை.. அப்போது என்ன நடந்தது என்று விசாரித்த போது, யாருமே எதிர்ப்பார்க்காத நாடகம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது சித்திரவாடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 28 வயதாகும் ஜெயராஜ்மேலவளம்பேட்டையில் உள்ள ஒரு பூச்சி மருந்து கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார். ஜெயராஜுக்கு பவுன்சூர் பகுதியை சேர்ந்த 32 வயதாகும் சங்கீதா என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சங்கீதா காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவ கல்லூரியில் பாதுகாவலராக வேலை செய்து வந்திருக்கிறார்.

ஜெயராஜுடன் சங்கீதாவுக்கு சில வருடங்கள் முன்பே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளதாம். இந்த விவகாரம் சங்கீதாவின் கணவருக்கு தெரிய வரவே அவர் கண்டித்தார். இதையடுத்து சங்கீதா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து கூடுவாஞ்சேரியில் உள்ள தனது தாயார் வீட்டில் சங்கீதா வசித்து வந்துள்ளாராம்.
ஆனால் அங்கும் தொடர்ந்து ஜெயராஜுடன் சங்கீதா திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் புதன்கிழமை அன்று சங்கீதா மற்றும் ஜெயராஜ் இருவரும் ஒன்றாக இருசக்கர வாகனத்தில் மகாபலிபுரத்திற்கு வந்துள்ளனர். அங்கு அவர்கள் ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார்கள்.
அப்போது விடுதியில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. போனில் பலருடன் பேசுவதாக சண்டை போட்டாராம். இதனால் சங்கீதாவை ஜெயராஜ் திட்டியதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் உணவு வாங்க வெளியே சென்றுள்ளார் ஜெயராஜ். திரும்பி வந்து பார்க்கும்போது சங்கீதா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக மகாபலிபுரம் போலீசாரிடமும், விடுதி ஊழியர்களிடமும் ஜெயராஜ் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராஜை கைது செய்து விசாரித்து வந்தனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சங்கீதாவின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்ததில் அவர் கழுத்து இறுக்கியதால் இறந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனை அறிக்கை தகவலின்படி மகாபலிபுரம் டிஎஸ்பி ரவி அபிராம் தலைமையில் போலீசார் ஜெயராஜிடம் விசாரித்தனர்.
விசாரணையில் ஜெயராஜ் போலீசாரிடம் கூறும் போது, "சங்கீதாவை ஆசை வார்த்தை கூறி மகாபலிபுரத்தில் உள்ள விடுதிக்கு அழைத்து வந்தேன். அவர் பலருடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகம் இருந்தது. இதனால் அவருடன் தகராறில் ஈடுபட்டேன். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரத்தில் அவருடைய கழுத்தை சுடிதார் துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்து உடலை மின்விசிறியில் தொங்க விட்டேன்" இவ்வாறு கூறினார். இதையடுத்து கைது செய்யப்பட்ட ஜெயராஜை போலீசார் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications