எடப்பாடி vs ஸ்டாலின்.. தினகரனை பிளந்த தலைகள்? திமுக, அதிமுகவிற்கு சிக்கலாகிறதா தேனி?
தேனி: எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் தேனியில் பிரச்சாரம் செய்த போது டிடிவி தினகரன் குறித்து கடுமையாக விமர்சித்தார். இதேபோல் நேற்று தேனியில் பேசும் போது ஸ்டாலினும் டிடிவியை கடுமையாக விமர்சித்தார். இந்த பிரச்சாரங்களை பார்க்கும் போது தேனி தொகுதி திமுக, அதிமுகவிற்கு சிக்கலாகிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
தேனி லோக்சபா தொகுதியை பொறுத்தவரை கடந்த காலங்களில் அதிமுவின் கோட்டையாகவே இருந்துள்ளது. இந்த தொகுதியை திமுக பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கிவிடும்.. தேனி மாவட்டத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போட்டியிட்ட காரணத்தால் இந்த தொகுதியில் யார் வேட்பாளராக நின்றாலும் இரட்டை இலைக்கே வாக்களிப்பவர்கள் அதிகம்..

தமிழ்நாட்டில் அதிமுக வலுவாக உள்ள இரண்டு மாவட்டங்களை சொல்வது என்றால், அதில் முதல் இடத்தில் தேனி வரும்.. இரண்டாம் இடத்தில் தான் கோவையே வரும்.. அந்த அளவிற்கு அதிமுகவிற்கு தேனியில் செல்வாக்கு அதிகம்.. இதெல்லாம் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை தான். அதன்பிறகு நிலைமை கொஞ்சம் மாறி உள்ளது. இங்கு 2021 சட்டசபை தேர்தலில் கம்பம், பெரியகுளம், ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் திமுகவே வெற்றி பெற்றது. அதேநேரம் போடி, உசிலம்பட்டி, சோழவந்தானில் அதிமுக வெற்றி பெற்றது. இப்போது இரு கட்சிகளும் சமபலம் உள்ள தொகுதியாக மாறியது.
இந்த சூழலில் அமமுக பொதுச்செயலளார் டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார்.. தேனி தொகுதியை பொறுத்தவரை டிடிவி தினகரனுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கிறது. 1999ல் டிடிவி தினகரன் இங்கு எம்பியாக இருந்தார். இது ஒருபுறம் எனில், தேனியில் டிடிவி தினகரன் ஆர்கே நகர் பாணியில் தன்னை ஜெயலலலிதாவின் தீவிர தொண்டராக அங்கீகரிக்குமாறு வாக்கு சேகரித்து வருகிறார்.. டிடிவி தினகரன் நிற்பதால் அதிமுகவினர் பலர் குழப்பமே அடைந்ததாக கூறப்படுகிறது. பாமர மக்கள் பலரிடமும் டிடிவி தினகரன் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர் என்ற பிம்பம் வலுவாக உள்ளது. இதனால் இவர் தான் அதிமுக வேட்பாளரா என்று கேட்கும் அளவிற்கு நிலைமை இருக்கிறது.
இதனால் தான், நேற்று முன்தினம் பிரச்சாரத்தில் டிடிவி தினகரனை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். வழக்கம் போல் திமுகவை அவர் விமர்சித்தாலும், டிடிவி தினகரனை பச்சோந்தி என்று மிகவும் கடுமையாக விமர்சித்தார்.. எடப்பாடி பழனிசாமி பேசும் போது, "தேனி தொகுதியில் பல பேர் சவால் விட்டுக் கொண்டிருக்குறாங்க.. இங்கே ஒரிஜினல் அ.தி.மு.க. நமது வேட்பாளர் நாராயணசாமி தான். திமுகவில் போட்டியிடுபவர் எந்த கட்சியில் இருந்து (அதிமுகவில்) போனார்? யார் அடையாளம் காட்டினார்கள்?. நீங்கள் அடையாளம் காட்டினீர்கள். உங்களின் உழைப்பால் எம்.எல்.ஏ., எம்.பி. ஆனார்கள். அதை மறைக்கலாமா? மறைக்கிறவர்களுக்கு இந்த தேர்தலில் தோல்வியை தண்டனையாக நீங்கள் தர வேண்டும்.
இன்னொருவர் அமமுகவில் இருந்து நிற்கிறார். அவரும் அதிமுகவில் இருந்து போனவர் தான். அவருக்கும் இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுங்கள். அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தார்களோ அவர்களுக்கு நீங்கள் தகுந்த பாடம் புகட்டுங்கள். அவர்கள் நன்றி உடையவர்களாக இருந்தால் இங்கேயே இருந்திருக்க வேண்டும்.
டி.டி.வி.தினகரன் 14 ஆண்டுகள் எங்கே போனார் என்றே தெரியவில்லை. இப்போது பதவிக்காக தேனி மக்களாகிய உங்களை வந்து பார்க்கிறார். தன்னுடைய சுய லாபத்துக்காக, அதிகாரத்துக்காக கட்சி மாறி போனவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களுக்கு எம்.ஜி. ஆரும், ஜெயலலிதாவும் உங்களின் மூலம் தேர்தலில் சரியான தண்டனையை வழங்கிவிடுவார்கள்.
பாஜகவை அன்று விமர்சனம் செய்த தினகரன் தற்போது அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். பச்சோந்தி தான் கொஞ்சம் நேரம் கழித்து நிறம் மாறும். இவர்கள் அடிக்கடி நிறம் மாறுகிறவர்கள். இவர்களை நம்பி ஓட்டுபோட முடியுமா? 14 ஆண்டு காலம் மக்களை பார்க்காத ஒருவருக்கு ஓட்டு போட்டு என்ன பயன் கிடைக்கும்" என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதனிடையே நேற்று முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "கடந்த முறை தமிழ்நாட்டில் ஒரே ஒரு தொகுதி தவிர எல்லாவற்றிலும் வென்றோம். அந்த ஒரே ஒரு தொகுதியான இந்த தேனி தொகுதியில் இந்த முறை, தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்..
தேனி தொகுதியில் பா.ஜ.க. ஆதரவு பெற்ற வேட்பாளராக தினகரன் நிற்கிறார். இதே பா.ஜ.க.வைப் பற்றி அவர் என்ன சொல்லி இருந்தார்? "பா.ஜ.க. கூட்டணியில் சேர்வது தற்கொலை செய்வதற்குச் சமம். யாராவது தெரிந்தே கிணற்றில் விழுவார்களா?" என்று கேட்டவர். இப்போது என்ன தெரிந்தே கிணற்றில் விழ வந்திருக்கிறாரா? என்பதுதான் தேனிக்காரர்கள் கேட்க வேண்டிய கேள்வி.
அதுமட்டுமல்ல, இன்னும் பேசியிருக்கிறார். 'டெல்லியில் வேண்டும் என்றால் பெரிய கட்சியாக, ஆளும்கட்சியாக பா.ஜ.க. இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் அதற்கு என்ன இருக்கிறது? நோட்டாவுடன் போட்டி போடக் கூடிய கட்சிதான் பா.ஜ.க."என்று சொன்னவர்தான் இந்த தினகரன். அவரைப் பார்த்து நீங்கள் கேட்க வேண்டும். இன்று நோட்டாவுடன் போட்டி போடத் தேனிக்கு வந்திருக்கிறீர்களா? இல்லை உங்களை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள வந்திருக்கிறீர்களா? என்று.
நான் சென்ற கூட்டங்களில் சொன்னதுபோன்று, மோடி வாரண்டியுடன் ஒரு வாஷிங்மெஷின் வைத்திருக்கிறார். அதில் ஊழல்வாதிகளை உள்ளே அனுப்பினால், அவர்கள் சுத்தமாகி வெளியே வந்துவிடுவார்கள். 'மேட் இன் பி.ஜே.பி.' வாசிங் மெஷின் அது. மேட் இன் ஜப்பான், மேட் இன் அமெரிக்கா, மேட் இன் இங்கிலாந்து வாஷிங் மெஷின் இது. அந்தக் கட்சியின் கூட்டணி வைத்துக்கொண்டால், அந்த வாஷிங் மெஷின் வெளுத்துவிடும். அப்படி வெளுக்கப்பட்டு பா.ஜ.க. கூட்டணி சார்பில் நிற்கின்றவர்தான் தினகரன்.
1995-96-ம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து ரூ.62 லட்சத்து 61 ஆயிரம் அமெரிக்கடாலர்களை அங்கீகாரம் அற்ற முகவர் மூலமாகப் பெற்று, இங்கிலாந்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாகக் கொடுத்ததாக, அன்னியச் செலாவணி மோசடியில் சிக்கியவர்தான் இந்த தினகரன். 'பெரா' போன்ற சொற்களை தமிழ்நாட்டில் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை தினகரனுக்குத்தான் உண்டு. இந்த வழக்கை 30 ஆண்டுகளாக இழுத்துக்கொண்டு இருக்கிறார். இந்த வழக்கில் அவருக்கு ரூ.28 கோடி அமலாக்கத்துறை அபராதமாக விதித்தது. இப்போது புரிகிறதா, ஏன் இவர் பாஜகவுக்குச் சென்றார் என்று.
அதுமட்டுமல்ல, ஜெயலலிதா மறையும்வரை, போயஸ் கார்டனுக்குள் நுழைய முடியாமல் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இருந்தவர் தினகரன். காரணம் என்ன? ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கோடு தன்னுடைய வழக்கைச் சேர்த்தால், தனக்கும் தண்டனை கிடைத்துவிடும். அதனால் 2 வழக்கையும் தனியாக நடத்த வேண்டும் என்று ஜெயலலிதாவின் வக்கீலையே மிரட்டியதால் விரட்டப்பட்டவர். கடைசியாக, ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, சசிகலாவால் கட்சிக்குள் சேர்க்கப்பட்ட தினகரன்தான், இப்போது வழக்குகளுக்கு பயந்து, சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து, மோடி வாஷிங் மெஷின் மூலமாகத் தேனிக்குள் நுழைந்து இருக்கிறார்.
இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகளைத் தோற்கடிக்க வேண்டும். தேனி மக்களே ஏமாந்துவிடாதீர்கள். கடந்த முறை பன்னீர்செல்வம் மகனிடம் ஏமாந்துவிட்டீர்கள். இந்தமுறை, சசிகலா குடும்பத்திடம் ஏமாந்துவிடாதீர்கள்." இவ்வாறு கூறினார். முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருமே டிடிவி தினகரனைத்தான் மிக கடுமையாக விமர்சித்தே பிரச்சாரத்தில் பேசினார்கள்.
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications