சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி காற்று மாசு தமிழகத்தை பாதிக்குமா.. வானிலை ஆராய்ச்சியாளர் ரமணன் சொல்வது என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லியிலிருந்து பரவும் காற்று மாசு.. என்ன காரணம்?- வெதர்மேன் விளக்கம்

    சென்னை: டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என ரமணன் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் காற்று மாசு கடுமையாக தாக்கியுள்ளது. கடந்த ஒரு வாரமாக மூச்சு திணறும் அளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த காற்று மாசு சென்னை உள்பட தமிழகத்தில் பல பகுதிகளில் அடுத்த வாரம் வரக் கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தெரிவித்திருந்தார்.

    இதற்கு இந்திய வானிலை மையத்தின் துணை இயக்குநர் பாலச்சந்திரன் மறுப்பு தெரிவித்தார். இரு நகரங்களுக்கும் இடையே பல மலைகள், முகடுகள் உள்ளன, அவற்றை தாண்டி அங்கிருக்கும் காற்று சென்னைக்கோ தமிழகத்துக்கோ வராது என்றார்.

    கொல்லப்பட்ட ஐஎஸ் தீவிரவாதி பாக்தாதி அக்கா கைது.. தங்க சுரங்கம் சிக்கியது.. உளவு அமைப்புகள் உற்சாகம்கொல்லப்பட்ட ஐஎஸ் தீவிரவாதி பாக்தாதி அக்கா கைது.. தங்க சுரங்கம் சிக்கியது.. உளவு அமைப்புகள் உற்சாகம்

    புகை மண்டலம்

    புகை மண்டலம்

    இதுகுறித்து சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநரும் வானிலை ஆராய்ச்சியாளருமான ரமணன் தனியார் தமிழ் தொலைகாட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறுகையில் இந்த புகை மண்டலம் டெல்லியில் இருக்கிறது.

    டெல்லியில் காற்று மாசு

    டெல்லியில் காற்று மாசு

    இந்தோனேஷியாவில் காடுகள் எரிக்கப்பட்டபோது அதன் புகை அண்டை நாடான சிங்கப்பூருக்கு பரவியது. இரு நாடுகளும் அருகருகே உள்ளது. இரண்டுக்கும் நடுவே மலைகள் ஏதும் இல்லை. டெல்லியில் உள்ள காற்று மாசு சென்னைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

    கிழக்கு நோக்கி நகரும்

    கிழக்கு நோக்கி நகரும்

    இது ஏற்பட வேண்டுமானால் காற்றின் திசைதான் அந்த காற்றை இங்கே தள்ள வேண்டும். 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள காற்றின் திசையை பார்க்கும் போது அந்த காற்று சென்னைக்கு வருவது போல்தான் காட்டுகிறது. அதே 3 கி.மீ. உயரத்தில் உள்ள அந்த காற்றின் திசை கிழக்கு நோக்கி நகரும்படி காட்டும்.

    பீடபூமி, மலைகளை கடந்து வராது

    பீடபூமி, மலைகளை கடந்து வராது

    தற்போது 1.5 கிலோமீட்டர் உயர காற்றை வைத்து நான் சொல்கிறேன். அங்கிருக்கும் காற்று மாசு சென்னைக்கு வரவேண்டும் என்றால் பல மாநிலங்களையும், விந்த்யா சாத்புரா மலை, கிழக்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பல மலைகளையும், தக்கான பீடபூமியையும் கடந்து வருமா என்பது சந்தேகமே.

    மாசு கட்டுப்பாடு வாரியம்

    மாசு கட்டுப்பாடு வாரியம்

    டெல்லிக்கு கீழே உள்ள ஒடிஸாவுக்கு வந்தால் அந்த காற்று நமக்கு வருமா என்பதை யோசிக்க வேண்டும். அண்டை பகுதிகளுக்கெல்லாம் வரவில்லை என்றால் நமக்கு வாய்ப்பு குறைவுதான் என்பது அர்த்தம். சென்னையில் காற்று மாசு அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கடமை.

    மூச்சுத்திணறல்

    மூச்சுத்திணறல்

    இதுபோன்ற அச்சமூட்டும் நேரங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தான் காற்றின் தர குறியீட்டை வெளியிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார் ரமணன். என்னதான் காற்று மாசு தமிழகத்துக்கு வந்தடையாது என நிபுணர்கள் சொன்னாலும் ஆஸ்துமா, வீசிங் பிரச்சினை உள்ளவர்கள் நேற்றும் இன்றும் மூச்சுவிட சிரமப்பட்டதாக கூறுகிறார்கள்.

    English summary
    Weather researcher Ramanan says that Chennai or Tamilnadu will not affect by polluted air which scares Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X