Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் அடைத்து வைக்க விரும்பவில்லை.. தேசிய அரசியலில் சரத்குமாரின் தேவை உள்ளது.. அண்ணாமலை மூவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்து விட்டார் நடிகர் சரத்குமார். கட்சியில் இணைந்த சரத்குமாரை தமிழ்நாட்டில் அடைத்து வைக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை.

திரைத்துறையில் சுப்ரீம் ஸ்டாராக கலக்கிய சரத்குமார், அரசியல் மீதான ஆசையில் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தார்.1996 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். இந்த தேர்தலுக்குப் பிறகு திமுகவில் இணைந்த சரத்குமாருக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டது.

There is a need for Sarathkumar in national politics says Annamalai

அடுத்த சில ஆண்டுகளிலேயே திமுக தலைமையோடு ஏற்பட்ட மோதல் காரணமாக திமுகவில் இருந்து விலகினார். கடந்த 2001 ஆம் ஆண்டு தேர்தலின் போது அதிமுகவில் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார்.

அடுத்த 5 ஆண்டுகளில் அதிமுகவில் இருந்து விலகிய சரத்குமார், 2007 ஆம் ஆண்டில் சமத்துவ மக்கள் கட்சி என்ற தனி கட்சியை தொடங்கினார். இதனையடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் சரத்குமார் போட்டியிட்டார். ஆனால் வாக்குகளும் கிடைக்கவில்லை, வெற்றியும் பெற முடியவில்லை.

இதனை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இணைந்து போட்டியிட்டது. இதில் இரண்டு இடங்களில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் சரத்குமாரும் மற்றொரு தொகுதியில் எர்ணாவூர் நாராயணனும் வெற்றி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி இரண்டாக உடைந்தது. இதனையடுத்து அதிமுக கூட்டணியில் இருந்தும் விலகுவதாகவும் சரத்குமார் அறிவித்தார். அதிமுகவில் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்தினார்கள் எனவும் சரத்குமார் பரபரப்பாக விமர்சனம் செய்தார்.

இதனையடுத்து ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டபோது ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார் சரத்குமார். 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர். கேநகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக களம் இறங்கிய சரத்குமார், அந்த தொகுதியில் போட்டியிட்ட டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தோடு இணைந்து தேர்தலை சரத்குமார் எதிர்கொண்டார். இதில், சரத்குமார் கட்சிக்கு 40 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் 37 இடங்களுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவித்த சரத்குமார், மீதமுள்ள 3 இடங்களை கமலிடம் திருப்பி கொடுத்துவிட்டார். இந்த தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி 89,220 வாக்குகள் மட்டுமே பெற்றது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது.

நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் சமக இணைந்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது கட்சியை முழுவதுமாக பாஜகவில் இணைத்து சமக தொண்டர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளார் சரத்குமார். இணைப்பு கூட்டத்தில் சில சமக தொண்டர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சரத்குமாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதெல்லாம் எத்தனை இடங்களில் போட்டி என்ற கேள்வி என்னை சங்கடமாக்கியது. நம்முடைய வலிமைக்கு மோடியுடன் சேர்ந்து செயல்பட்டால் என்ன என்ற எண்ணம் தோன்றது. நேற்று இரவு கட்சியை பாஜகவில் இணைக்கலாமா என்று யோசித்தேன். உடனே என் மனைவியை எழுப்பி, இதை கூறினேன். நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு துணை நிற்பேன் என்று அவர் கூறினார். நள்ளிரவு 2 மணியளவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தேன் என்று சரத்குமார் கூறினார்.

சரத்குமார் கட்சியை பாஜகவில் இணைத்த உடன் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் சரத்குமாரை அடைத்து வைக்க விரும்பவில்லை என்று சொன்னார். தேசிய அளவில் சரத்குமாரின் தேவை உள்ளதாகவும் கூறினார் அண்ணாமலை. தமிழ்நாட்டில் 17 ஆண்டு காலமாக அரசியல் கட்சி தொடங்கி நடத்தினாலும் அவர் முழு நேர சினிமா நடிகராகவே செயல்பட்டு வந்தார் சரத்குமார். பாஜகவில் கட்சியை இணைத்தாலும் சாமர்த்தியமாக தேசிய அரசியல் பக்கம் சரத்குமாரை நகர்த்தி விட்டார் அண்ணாமலை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+