2 "மேட்டரை" கையில் எடுத்த பாஜக.. முட்டி மோதும் "கோவையும், சென்னை"யும்.. பரபரக்கும் கமலாலயம்!
: மத்திய அமைச்சரவை பதவிக்கு தமிழக பாஜகவிலும் முயற்சி நடக்கிறதாம்
சென்னை: 2 முக்கியமான செய்திகள் தமிழக பாஜக குறித்து கசிந்து வருகின்றன.. இதனால், திமுக தரப்பு அடுத்த அதிரடிக்கு தன்னை தயார்படுத்தியும் வருகிறது..!
நடந்த முடிந்த 5 மாநில தேர்தலில் குறைந்தபட்சம் 3 மாநிலங்களிலாவது பாஜக ஆட்சியை பெற நினைத்து.. இதற்காக பாடுபட்டு உழைத்தது..!
அதிலும் மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர்கள் ஒவ்வொருவராக படையடுத்தும், மம்தா ஒற்றை நபராக கெத்து காட்டி விட்டார்.. அசாமில் மட்டும் ஆட்சியை தக்க வைத்தது. கேரளாவிலும் சரி, நமக்கும் சரி, பாஜகவால் எதுவுமே செய்ய முடியாத சூழல் உள்ளது..!

ரங்கசாமி
ஆனால், புதுச்சேரி ஆட்சியில் மெல்ல ஏறி வருகிறது.. பலவீனமான நிலையில், திடுதிப்பென்று உள்ளே நுழைந்து, சாணக்கியத்தனத்தால் தன்னுடைய பலத்தையும் பெருக்கி இன்று வரை டஃப் தந்து வருகிறது.. ரங்கசாமியோ திணறி கொண்டிருக்கிறார்.

திருமாவளவன்
புதுச்சேரி மாதிரிதான் தமிழகத்துக்கும் வரக்கூடும் என்று திருமாவளவன் முதல் பலரும் சொல்லி வந்தனர்.. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பில் உள்ளதால், ஆரம்பம் முதலே பாஜகவுக்கான நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.. ஒன்றியம் முதல் நீட் வரை பல விவகாரங்களில் மாநில உரிமைக்கான பிரச்சனைகளை விட்டு தராமல், ஒவ்வொன்றையும் பாஜகவுக்கு எதிரான அதேசமயம் மக்களுக்கு ஆதரவான விஷயங்களை கையில் எடுத்து வருகிறது.

டெல்லி
இதுபோன்ற விவகாரங்களினால் டெல்லிக்கே கொஞ்சம் ஜெர்க் தான்.. அதனால்தான், பதவி, பொறுப்பு என அதிகாரப்பூர்வமாக தங்கள் பலத்தை பெருக்கி, அதன்மூலம் தமிழ்நாட்டில் தங்கள் கட்சியின் செல்வாக்கை நிலைநிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.. அந்த வகையில் 2 விதமான பேச்சுக்கள் எழுந்துள்ளன.

சீனியர்கள்
தமிழக பாஜகவைச் சேர்ந்த ஒருவருக்கு துணை நிலை ஆளுநர் பொறுப்பு அளிக்க டெல்லி மேலிடம் முடிவெடுத்திருக்கிறதாம்... எனவே, இந்த பதவியை பிடிக்கதான் இப்போதே பாஜகவில் சீனியர்கள் முண்டியத்து முயன்று வருகின்றனர்..

கொங்கு மண்டலம்
அதிலும் இந்த பதவிக்கு கொங்கு மண்டல சீனியர் ஒருவருக்கும், சென்னை தி.நகர் சீனியர் ஒருவருக்கும் இடையேதான் பயங்கரமான போட்டி எழுந்துள்ளதாம். ஆளுக்கு ஒரு பக்கம் டெல்லிக்கு அழுத்தம் தர தனித்தனியாக ஆரம்பித்துள்ளனராம். மாறி மாறி டெல்லிக்கு பறக்கின்றனர்.. மாறி மாறி ஒருவரை பற்றி ஒருவர் குற்றச்சாட்டுகளை டெல்லிக்கு சொல்லி வருகிறார்களாம்.

பாஜக பிரமுகர்
அதேபோல, மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படும் என்று சொல்லப்பட்டு வருகிறது.. சமீபத்தில் ராம்விலாஸ் பஸ்வான் இறந்துவிட்டதால், அவர் வகித்த உணவுத்துறையை தற்போது பியூஷ் கோயல்தான் கூடுதலாக கவனித்துவருகிறார்... அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் பட்சத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவரையே ராஜ்ய சபா எம்பி-யாக்கி, அந்த உணவுத்துறையை அவரிடமே அளிக்கவும் டெல்லி மேலிடம் யோசித்து வருகிறதாம்..

கடும் போட்டி
இந்த பதவிக்கும் கடுமையான போட்டி கட்சிக்குள் எழுந்துள்ளது.. இதனால் கமலாலயமே படுபிஸியில் உள்ளது.. இந்த இரு பதவிகளுக்குமே தமிழக பாஜகவை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டால், நிச்சயம் அக்கட்சியின் பலம் இங்கு கூடவே செய்யும்... இதனை சமாளிக்கவும் திமுக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.. பார்ப்போம்..!
-
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications