சபாஷ்.. ஸ்டாலின் - கருணாநிதி போட்டோ இல்லையே.. ரூ.1000 உரிமை தொகை திட்டம்.. இதை பார்த்தீங்களா?
சென்னை: தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக விழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட உள்ளது.
தற்போது வரை 1.06 கோடி பயனாளிகள் இதில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். செப்டம்பர் 15ம் தேதியில் இருந்து ஒவ்வொருவராக பணம் பெற தொடங்குவார்கள். 1.70 கோடி பேர் விண்ணப்பம் செய்த நிலையில் அதிகபட்சம் 1.06 கோடி பேருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது.

இன்றே சோதனை முயற்சியாக பலருக்கு பணம் அனுப்பப்பட்டு உள்ளது. இன்னும் பலருக்கு ரூ.1 அனுப்பி சோதனை செய்யப்பட்டு வருகின்றது. நாளை 20 ஆயிரம் பேருக்கு நேரடியாக முதல்வர் ஸ்டாலின் ரூ. 1000 கொடுக்க உள்ளார்.
இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான exclusive ஏடிஎம் கார்டு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. கலைஞர் மகளிர் உரிமைக் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரத்தியேக ஏடிஎம் கார்டுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்
நாளை புதிய பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்த ஏடிஎம் கார்டில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படமோ, முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படமோ இடம்பெறவில்லை. இது பாராட்டுகளை பெற்று வருகிறது.
முன்பெல்லாம் அரசியலில் மக்கள் வரிப்பணத்தில் கொண்டு வரும் திட்டங்களில் அரசியல் விளம்பரமாக முதல்வர் பெயர், புகைப்படம் இருக்கும். ஆனால் ஸ்டாலின் அதை தவிர்த்து வருகிறார். இலவச பள்ளி பேக் தொடங்கி வழங்கிய எதிலும் தன்னுடைய புகைப்படத்தை அவர் பயன்படுத்தவில்லை.
இந்த திட்டத்திற்கு கூட கலைஞர் உரிமைத் தொகை என்று வைத்தாலும் கூட அவரின் அல்லது தன்னுடைய புகைப்படத்தை ஸ்டாலின் பயன்படுத்தாமல் தவிர்த்து இருக்கிறார். கார்டில் 3 பெண்கள் புகைப்படம் கொடுக்கப்பட்டு உள்ளது. அடித்தட்டு உழைக்கும் மக்களின் புகைப்படங்கள் இதில் கொடுக்கப்பட்டு உள்ளன.
முக்கிய அறிவிப்பு: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 திட்டத்திற்கு தேர்வாகியும் பணம் வரவில்லை என்றால் என்ன செய்வது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. இதற்கு நீங்கள் மீண்டும் முகாம்களில் மேல்முறையீடு செய்ய வேண்டும். மேல்முறையீடு மூலம் வங்கி கணக்குகளை மாற்ற வேண்டும்.
தவறான வங்கி கணக்கை முகாம் மூலம் மட்டுமே மாற்ற முடியும். இந்த முகாம்கள் எப்படி நடக்கும் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தல் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அதில், குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கிட தமிழக அரசால் 'கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்' செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற 24.07.2023 முதல் 04.08.2023 வரை முதல் கட்டமாகவும், 05.08.2023 முதல் 14.08.2023 வரை இரண்டாவது கட்டமாகவும், மேற்சொன்ன இரண்டு கட்டங்களிலும், விடுபட்டவர்களுக்கு 18.08.2023 முதல் 20.08.2023 வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கோடி மகளிர் பயனாளிகளாகத் மேல்முறையீடு கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18.09.2023 முதல் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.
வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும் நேர்வுகளில், சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் வழி கள ஆய்வு அறிக்கையினைப் பெற்று விசாரணை செய்வார். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும்.












Click it and Unblock the Notifications