ஒவ்வொருவரின் பிரார்த்தனையும் அப்பாவை மீட்டெடுக்கும்... நன்றி சொல்ல வார்த்தையில்லை - எஸ்பிபி சரண்
ரசிகர்களின் பிரார்த்தனையும் வேண்டுதலும் அப்பாவை மீட்கும் என்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி சரண் கூறியுள்ளார். அப்பாவிற்காக பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் நன்றி என்
சென்னை: அப்பாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றாலும்
ஒவ்வொருவரின் பிரார்த்தனையும் வேண்டுதலும் அவரது உயிரை மீட்டெடுக்கும் என்று எஸ்.பி.பி சரண் கூறியுள்ளார். அப்பாவிற்காக பிரார்த்தனை செய்யும் ஒவ்வொருவருக்கும் நன்றி என்று கூறியுள்ள சரண், அப்பாவிற்காக பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்
Recommended Video

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கடந்த 5ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி முதல் திடீரென மோசமடைந்தது. இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எஸ்.பி பாலசுப்ரமணியம். தினசரியும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நோயிலிருந்து குணமடைய வேண்டி அவரது நலம் விரும்பிகளும் நண்பர்களும் வீடியோ மூலமாக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
தற்போது அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இணைந்து இன்று மாலை கூட்டுப்பிராத்தனை செய்ய அழைப்பு விடுத்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா. நடிகர் ரஜினிகாந்த் இந்த பிரார்த்தனையில் பங்கேற்பதாக கூறியுள்ளதோடு ரஜினி மக்கள் மன்றத்தினரும் இந்த கூட்டுப்பிரார்த்தனையில் பங்கேற்க உள்ளதாகவும் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.
பாடும் நிலா எழுந்து வா கூட்டுப்பிரார்த்தனை செய்வோம் என்று உருக்கமாக அழைப்பு விடுத்துள்ளார் ரஜினிகாந்த். இந்த நிலையில் தினமும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை பற்றி தகவல் கூறும் அவரது மகன் எஸ்.பி.பி சரண் இன்றும் வீடியோ மூலம் அப்பாவிற்காக பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றாலும் ரசிகர்களின் பிரார்த்தனை அவரை மீட்டெடுக்கும் என்று நம்புகிறோம். உங்கள் பிரார்த்தனைகள் வேலை செய்கின்றன. அப்பாவிற்காக கூட்டுப்பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும், பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்துள்ளவர்களுக்கும் நன்றி. உங்களின் ஒவ்வொருவரின் பிரார்த்தனையும் அவர் நலமடைய உதவும் உங்களின் பிரார்த்தனைகளுக்கு குடும்பத்தோடு நாங்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார் எஸ்.பி.பி சரண்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications