சாலை விபத்தில் பலியான பெண் இன்ஜினியர்.. "அரசின் அலட்சியத்தால் உயிர் பலி ஏற்படுவதா?" - ராமதாஸ் ஆவேசம்
சென்னை: சென்னையில் சாலை விபத்து ஒன்றில் பெண் இன்ஜினியர் பலியான சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனவர் ராமதாஸ், இனி தமிழக அரசின் அலட்சியத்தால் உயிர் பலி ஏற்படக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை போரூரை சேர்ந்தவர் ஷோபனா (22). பொறியியல் பட்டதாரியான இவர், ஊரப்பாக்கத்தை அடுத்த கூடுவாஞ்சேரியில் உள்ள zoho ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.

விபத்தில் உயிரிழந்த பெண் இன்ஜினியர்
இவர் நேற்று தனது தம்பியை பள்ளியில் விடுவதற்காக ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றார். இந்நிலையில், மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் சென்ற போது, அங்கிருந்த பெரிய சாலைப் பள்ளத்தில் ஷோபனாவின் ஸ்கூட்டர் இறங்கியதில் நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வேகமாக வந்த மணல் லாரி ஒன்று ஷோபனா மீது ஏறிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த கோர விபத்தில் ஷோபனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெரும் சோகம்
பெண் இன்ஜினியர் ஷோபனா உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் இருந்த பள்ளத்தால் ஒரு இளம்பெண்ணின் உயிர் போய்விட்டதே என்ற வருத்தத்தில் பொதுமக்கள் உள்ளனர். இதனிடையே, அவர் பணிபுரிந்து வந்த zoho ஐடி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, "மோசமான சாலையால் ஒரு ஊழியரை நாங்கள் இழந்துவிட்டோம்" என சமூக வலைதளங்களில் பதிவிட்டதும் வைரலானது.

அரசின் அலட்சியம் - ராமதாஸ் ஆவேசம்
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மதுரவாயல் சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால், தடுமாறி விழுந்த ஷோபனா என்ற மென்பொறியாளர் மீது லாரி ஏறி உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்து நடந்த சாலையின் பராமரிப்பு, எந்தத் துறையின் பொறுப்பு என்பது குறித்த சர்ச்சையில் நீண்டகாலமாக இந்த சாலை பராமரிக்கப்படவில்லை என்றும், கடந்த 2020-ஆம் ஆண்டு அங்கு நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அரசுத் துறைகளின் அலட்சியத்தால் இனியும் உயிர் பலி ஏற்படக்கூடாது.

"உடனடியாக சீரமைக்க வேண்டும்"
மெட்ரோ ரயில் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் ஆகியவற்றாலும், பருவமழை காரணமாகவும் சென்னையில் பெரும்பான்மையான சாலைகள், பயணிக்க முடியாத அளவுக்கு மோசமாக சேதமடைந்துள்ளன. அவை இன்னும் சீரமைக்கப்படவில்லை. சென்னையில் சேதமடைந்த சாலைகளால் இனி ஒரு உயிர் கூட பறிபோகக்கூடாது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைக்க தமிழக அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications