அதிமுக மா.செ கூட்டம்.. சிரிப்பா சிரிச்சோம்.. ராஜேந்திர பாலாஜி ஹாஹாஹா பதில்!
Recommended Video
சென்னை: அதிமுக கூட்டத்தில் நடந்தவை என்ன என்பது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதிமுகவுக்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. கட்சியில் இரண்டு தலைமை இருப்பதால் முடிவு எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் யாரிடம் அதிகாரம் உள்ளது என்பது தெரியவில்லை என்றும் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கருத்து தெரிவித்தார்.
இதே கருத்தையே கட்சியின் நிர்வாகிகள் பலரும் கூறினர். மேலும் கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்றும் நிர்வாகிகளும் அதிமுக எம்எல்ஏக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
இதைத்தொடர்ந்து இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், எம்பிக்கள், மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்ற கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

சிரித்துக்கொண்டே வந்தோம்
அப்போது கூட்டத்திற்கு சிரித்துக் கொண்டே சென்றோம், சிரித்துக் கொண்டே வெளியே வந்தோம் என்றார். தற்போது உள்ள தலைமை அடிப்படையில் செயல்பட கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஒற்றை தலைமை - பேசவில்லை
மேலும் ராஜன் செல்லப்பாவும் அதை ஏற்றுக் கொண்டார் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். மேலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக பேசவில்லை என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

தேர்தல் வெற்றி
அதிமுக பொதுக்குழு குறித்து முதல்வர், துணை முதல்வர் முடிவெடுப்பார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் தேர்தல் வெற்றி குறித்தும் வரும் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும் விவாவதிக்கப்பட்டது என்றும அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications