அவுட்சோர்சிங் முறையில் பேராசிரியர் நியமனம் ரத்து! எதிர்ப்புகளால் வாபஸ் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே பேராசிரியர்கள் நியமனம் என்ற நடைமுறைக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முறை கைவிடப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட சுற்றறிக்கையில்: ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் மட்டும் தான் குத்தகை முறையில் (அவுட்சோர்சிங்) தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் நியமனத்தில் குத்தகை முறை கடைபிடிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அவுட்சோர்சிங் முறைக்கு கண்டனங்கள் வலுத்ததால் அண்ணா பல்கலைக்கழகம் இந்த முறையை திரும்ப பெற்றுவிட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட டீன்கள், பல்வேறு மையங்களின் இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: "பல்கலைக்கழக நிதிக்குழு மற்றும் சிண்டிகேட் குழு எடுத்த முடிவின்படி, புதிதாக மேற்கொள்ளப்படும் உதவி பேராசிரியர், ஆசிரியர் அல்லாத அலுவலர்கள், ஊழியர்கள் நியமனம் தினக்கூலி அல்லது தொகுப்பூதியம் அடிப்படையில் அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும்.
ஏதேனும் திட்டங்களுக்கு பணியாளர்கள் தேவைப்பட்டால் தினக்கூலி அல்லது தொகுப்பூதியத்தில் தற்காலிக பணியாளர்களை திட்ட காலம் முடியும் வரை பணியில் அமர்த்தலாம். ஏதேனும் ஒரு துறையில் கூடுதலாக தற்காலிக பணியாளர்கள் பணியாற்றினால் அவர்களை பணியாளர் பற்றாக்குறை உள்ள வேறு துறையில் பணியமர்த்தலாம். இந்த புதிய உத்தரவு 20.1. 2024 முதல் நடைமுறைக்கு வருகிறது," என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்துள்ளது.
பதிவாளரின் இந்த சுற்றறிக்கை காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் இனிமேல் நிரந்தர உதவி பேராசிரியர்களோ, அலுவலர்களோ, ஊழியர்களோ நியமிக்கப்பட மாட்டார்கள் என்ற சூழல் ஏற்பட்டிருந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் ஏராளமான காலியிடங்கள் உள்ளன. அவற்றில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் ஆயிரக்கணக்கானோர் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் பாமக இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. தற்போது அவுட்சோர்சிங் முறை கொண்டு வரப்படாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதை பாமக வரவேற்றுள்ளது. இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவையான பேராசிரியர்களை தினக்கூலி/ மதிப்பூதியத்தின் அடிப்படையில் குத்தகை முறையில் மட்டும் தான் இனி நியமிக்க வேண்டும் என்று அதன் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டிருப்பதைக் கண்டித்து இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் மட்டும் தான் குத்தகை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் நியமனத்தில் குத்தகை முறை கடைபிடிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். அண்ணா பல்கலைக்கழகம் அதன் தவறை திருத்திக் கொண்டதில் மகிழ்ச்சி தான். ஆனால், செய்த தவறை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கு பதிலாக மூடி மறைக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் குத்தகை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது உண்மை. அதற்கு நான் கண்டனம் தெரிவித்த பிறகு எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தான் அண்ணா பல்கலைக்கழகம் அதன் முடிவை மாற்றிக் கொண்டது.
ஆனால், நிதிக்குழு தீர்மானத்தில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் என்று மட்டும் தான் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், சுற்றறிக்கையில் தான் ஆசிரியர்கள் என்ற சொல் தவறுதலாக இடம் பெற்று விட்டது போன்றும் ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் முயன்றுள்ளது. அதுமட்டுமின்றி அதன் தவறு தெரிந்து விடக் கூடாது என்பதற்காக புதிய சுற்றறிக்கை நேற்றைய தேதியில் வெளியிடப்பட்டுள்ளது. இது அப்பட்டமான மோசடி ஆகும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பழைய சுற்றறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி கண்டித்திருக்காவிட்டால், ஆசிரியர்கள் நியமனத்தில் குத்தகை முறை திணிக்கப்பட்டிருந்திருக்கும். ஆனால், குட்டு அம்பலமான பிறகு எதுவுமே நடக்காதது போன்று அண்ணா பல்கலைக்கழகம் நாடகமாடுகிறது. இது தவறு. ஓர் உயர்ந்த பல்கலைக்கழக நிர்வாகத்தில் இருப்பவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடக் கூடாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications