மீண்டும் மீண்டுமா.. விஜய் ரசிகர்களுக்கு அடுத்த அதிர்சசி.. தெறி ரீ ரிலீஸ் ஒத்திவைப்பா?
சென்னை: வரும் 23 ஆம் தேதி விஜய்யின் தெறி திரைப்படம் ரி ரிலீஸ் செய்யப்படும் என கலைப்புலி எஸ் தாணு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதனால் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகாததால் சோகத்தில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியை கொடுத்து இருந்தது. இந்த நிலையில் மீண்டும் விஜய் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தெறி படத்தின் ரீ ரிலீஸ் இன்று அறிவிக்கப்படும் என கலைப்புலி எஸ் தாணு தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜனநாயகன் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாததால் பொங்கல் தினமான 15 ஆம் தேதி தெறி படம் ரீ ரிலீஸ் ஆகும் என அறிவித்து இருந்தார். இதையடுத்து புதிய படங்கள் வருகைக்காக இந்த படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதன்பிறகு தற்போது மீண்டும் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். வரும் 3 ஆம் தேதி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அஜித் குமாரின் மங்காத்தா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் தெறி திரைப்படம்
ராஜா ராணி திரைப்படத்தை இயக்கிய அட்லீ அடுத்ததாக விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். இந்த படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து இருந்தார். நடிகை சமந்தா, எமி ஜாக்சன், மீனாவின் மகள் நைனிகா, மொட்டை ராஜேந்திரன், இயக்குனர் மகேந்திரன் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் அட்லீ மற்றும் விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.
ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் தான் நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இந்த பொங்கலுக்கு அதாவது கடந்த 9 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. பொங்கல் தினத்திலாவது வெளியாகிவிடும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் படம் வெளியாகவில்லை.
விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்
இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில் தான் தெறி படத்தினை ரீ ரிலீஸ் செய்வதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 'ஜனவரி 15 முதல் உலகமெங்கும்" என அவர் வெளியிட்ட பதிவிற்கு விஜய் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து இருந்தனர். ஆனால் கார்த்தியின் வா வாத்தியார் மற்றும் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் என அடுத்தடுத்து இரு படங்களின் தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் தெறி ரீ ரிலீஸ் தேதியை ஒத்தி வைப்பதாக தானு அறிவித்தார்.
இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அப்செட்டுக்கு உள்ளாகினர். இதையடுத்து தான் வரும் 23 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என தாணு மீண்டும் அறிவித்தார். இதற்காக இன்று டிரெய்லரும் வெளியானது. ஏற்கனவே வரும் 23 ஆம் தேதி சன் பிக்சர் தயாரிப்பில் உருவான அஜித்குமாரின் மங்காத்தா திரைப்படமும் ரீ ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
முடிவு இன்று அறிவிக்கப்படும்
இதனால் மீண்டும் அஜித் விஜய் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதாக இருந்தது. அஜித் விஜய் ரசிகர்களும் உற்சாகத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில் விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் ஷாக் கொடுக்கும் விதமாக கலைப்புலி எஸ் தாணு ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளார். அதில் மீண்டும் தெறி ரீ ரிலீஸ் தேதி இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
"புதிய இயக்குனர்கள், நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே V Creations நிறுவனத்தின் தலையாய பொறுப்பு. அந்த நோக்கத்தை முன்னிட்டு "தெறி" திரைப்படத்தின் வெளியீட்டின் முடிவு நாளை (அதாவது இன்று) அறிவிக்கப்படும். நன்றி" என்று கூறியிருக்கிறார். திரவுபதி 2 பட இயக்குனர் கேட்டுக்கொண்டதற்கு பதில் அளித்து இவர் இந்த ட்வீட் போட்டுள்ளார்.
திரவுபதி பட இயக்குனர் கோரிக்கை
முன்னதாக திரவுபதி பட இயக்குனர் மோகன் ஜி வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், வீ கிரியெஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு, எங்களைப் போன்ற வளர்ந்து வரும் குழுக்களுக்கு ஆதரவளித்து, தளபதியின் தெறி திரைப்படத்தை இந்த ஜனவரி 23 அன்று வெளியிடுவதை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நீங்கள் புதிய தயாரிப்பாளர்களுக்கும் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கும் நிறைய நன்மைகளைச் செய்துள்ளீர்கள். எனவே, எங்கள் திரௌபதி-2 திரைப்படத்தை முக்கிய திரையரங்குகளில் வெளியிட ஆதரவளித்து, ஒரு பிரம்மாண்டமான வெளியீட்டிற்கு எங்களுக்கு உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். என்று பதிவிட்டு இருந்தார்.
-
கரூர் கூட்ட நெரிசலில் ஒரே மாதத்தில் பறி போன இரு உயிர்கள்! விரைவில் வெளியாகும் கள அறிக்கை? -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
பெரம்பூரில் விஜயின் வெற்றிக்கு சிக்கல்.. தவெக சின்னம் விசிலா? கேமராவா? குழப்பிவிடும் தமிழக வாழ்வுரிமை கட்சி -
காங்கிரஸ், பாஜக கோட்டையில் குறிவைக்கும் தவெக.. விஜய்யின் பிரச்சார பயணம் தற்செயலானது அல்ல! -
“பிரச்சாரம் ரத்து என்பதில் உண்மை இல்லை.. விஜய் 24 மணி நேரமும் களத்திற்கு ரெடி” - CTR நிர்மல் குமார் -
வருமான வரியை மறைத்ததாக வழக்கு!ரூ 1.50 கோடி அபராதத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு போன விஜய் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
மாட்டிகிட்டியே பங்கு! திமுகவின் வாக்குறுதியை காப்பியடித்து தவெகவின் வாக்குறுதியாக அறிவித்த விஜய் -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
ஜனநாயகன் படத்தை இணையத்தில் லீக் செய்தது விஜய்யா? சென்சாரா? புது பாயிண்ட் சொல்லும் எஸ்.வி.சேகர் -
எடப்பாடியில் "மிஸ்ஸிங்!" 233ல் ‘வாட்சிங்!’ தமிழகம் முழுக்க ரகசிய டீமை இறக்கிய விஜய்? பரபரக்கும் தவெக












Click it and Unblock the Notifications