இந்த 5 விஷயம் தான் முக்கியம்.. குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 உரிமை தொகை.. கவனிச்சீங்களா?
சென்னை: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமை தொகை திட்டத்திற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா நலவாரிய ஓய்வூதியம் வாங்குவோருக்கு 1000 ரூபாய் கிடையாது. அதேநேரம் ஊனமுற்றோர் உதவி தொகை வாங்குவோருக்கு மட்டும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமை தொகை திட்டத்தை ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்துவோம் என்று அறிவித்த திமுக, அதன்படியே ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு திட்டத்தை செயல்படுத்த போகிறது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. யார் யாருக்கு 1000 உதவி தொகை கிடைக்கும். யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும். யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது என்பதையும் தமிழக அரசு நேற்று முறையான அறிவிப்பினை வெளியிட்டது.
கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டத்தில் உள்ள சில முக்கியமான 5 விஷயத்தை பார்ப்போம்.
முதல் விஷயம்: 21 வயது நிரம்பிய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 18 வயதில் திருமணம் ஆன ஏழை பெண்ணை குடும்ப தலைவியாக கொண்ட குடும்பம், அந்த பெண்ணுக்கு 21 வயதுவரை இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது.
இரண்டாவது விஷயம்: இரண்டரை லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை பொறுத்தே எத்தனை ஆயிரம் பெண்கள் கூடுலாக பெறுவார்களா இல்லையா என்பது தெரியவரும்,.
3வது விஷயம்: ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே முதியோர் உதவி தொகை அல்லது விதவை ஓய்வூதியம் வாங்குவோருக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்காது என்பது உறுதியாகி உள்ளது.
4வது விஷயம்: முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா நலவாரிய ஓய்வூதியம் வாங்குவோருக்கு 1000 ரூபாய் கிடையாது என்றாலும் ஊனமுற்றோர் உதவி தொகை வாங்குவோருக்கு மட்டும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
5வது விஷயம்: இந்த திட்டத்தில் ஒரு கோடி பெண்கள் பயன்பெற போகிறார்கள் என்பதால் பாதிக்கு பாதி பேர் கண்டிப்பாக பயன்பெற முடியும். அதற்காக இந்த கட்டுப்பாடுகளை அரசு விதித்தாலும், ஏழைகளுக்கு நிச்சயம் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். மொத்தம் உள்ள 2 கோடி ரேஷன் கார்டுகளில், அதிக வருமானம் உடையவர்களுக்கு மட்டுமே கிடைக்காது. மற்றவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்பதை முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில் நேற்று உறுதி செய்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இதுபற்றி நேற்று பேசும் போது, "சமுதாயத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களாகிய சாலையோரங்களில் குடியிருப்போர், பழங்குடியினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர ஆதரவற்றோர் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் பயன் அடைவதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.
அவர்களிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற தரவுகள் இல்லையென்றாலும் கூட, அவற்றைப் பெறுவதற்கு உரிய வழிவகை செய்து, இந்த மகளிர் உதவித் தொகை அவர்களுக்குக் கிடைப்பதற்கு உதவி புரிய வேண்டும். இந்த மகத்தான திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள மகளிரின் சமூகப் பொருளாதார நிலைமை பெருமளவில் மேம்படும் என நான் உறுதியாக நம்புகிறேன். கலைஞரின் வழியில் செயல்படும் நமது அரசு, மகளிர் வாழ்வில் என்றென்றும் ஒளியேற்றிடும் விளக்காக அமையும் என இந்த நேரத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications