Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவங்களுக்கு கோட்ஸே தானே! அப்பாவு வார்த்தையால் அதிர்ந்த அவை! ஸ்டாலினும் ரியாக்ட் பண்ண.. ப்பா பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று சபாநாயகர் அப்பாவு கோட்ஸே குறித்து திடீரென பேசியது கவனத்தை பெற்றது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. சட்டசபையில் இன்று காலை தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

குடிமைப்பணி பயிற்சி பெற்றவர்கள் முன்னிலையில் பேசிய ஆளுநர் ஆர். என் ரவி, சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் நிலுவையில் வைத்தால் அதற்கு நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள். கிடப்பில் கிடந்தால் அந்த சட்டம் இறந்துவிட்டதாகவே பொருள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

They are Godse followers says Speaker Appavu in assembly during CM Stalins resolution against Governor RN Ravi?

இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் தாக்கல் செய்து அதை நிறைவேற்றினார்.

பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவோடு இந்த தீர்மானம் வெற்றிபெற்றது. 144 உறுப்பினர்களிடம் ஆதரவோடு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. முக்கியமாக ஆளுநர் ஆர். என் ரவியின் செயல்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று வெற்றிபெற்ற தனி தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த தீர்மானம் மீதான விவாதத்தில் சட்டசபையில் உரை நிகழ்த்திய அமைச்சர் துரைமுருகன், ஆளுநர் ஆர். என் ரவி விதிகளை மீறி செயல்பட்டு கொண்டு இருக்கிறார். அவருக்கு ஆளுநராக மட்டுமின்றி குடிமகனாக இருக்க கூட தகுதி இல்லை. அவரின் செயல்பாடுகள் எல்லாம் மிக மிக தவறாக இருக்கின்றன. அரசியல் சட்டத்திற்கு எதிராக இருப்பவர் இந்திய குடிமகனாக இருப்பதற்கே தகுதியற்றவர்.

நாங்கள் ஆளுங்கட்சியா வருவோமானு தெரியாத காலத்துலயே ஆளுநர் தேவை இல்லை என சரியாக பிரகடன படுத்திகொண்ட கட்சி திமுக. ஆளுநரின் செயல்பாடுகள் ஒவ்வொன்று தவறாக இருக்கின்றன. நாங்கள் ஒரு பேச்சை அதை இவர் மாற்றி பேசினார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் சட்டசபையிலேயே பதிலடி கொடுத்தார்.

முதல்வர் ஸ்டாலின் பாதி கலைஞர்.. பாதி அண்ணா போல மாறிவிட்டார். முன்பு பார்த்த ஸ்டாலின் போல இல்லை இவர். என்ன இவர் இப்படி மாறிவிட்டார் என்று நாங்களே வியந்து பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

ஆளுனருடன் ஏற்பட்ட மோதலால் நாங்கள் அவர் கொடுத்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவில்லை. அதன்பின் குடியரசுத் தின தேநீர் விழாவில் அவரே போன் செய்து அழைத்தார். அதற்கு நாங்கள் சென்றோம். அங்கே டீ கொடுத்தனர். அங்கே வந்தவர்கள் யார் என்றே தெரியவில்லை. அது ஒரு "கும்பல்". அங்கே ஒரு படம் போட்டனர். அதில் சுதந்திர போராட்ட தியாகிகள் என்று பலரின் படத்தை போட்டனர். கோகுலே வந்தார்.. பாரதியார் வந்தார். சாவக்கார் கூட வந்தார். ஆனால் குடியரசு தின தேநீர் விருந்தில் ஆளுநர் மாளிகையில காட்டப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் வீடியோல காந்தி படம் இடம் பெறவில்லை.

அந்த படத்தில் காந்தி புகைப்படம்.. நேரு படம் இல்லை. சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகள் வீடியோவில் காந்தி போட்டோ இல்லை. காந்தி இல்லாமல் சுதந்திரமா என்று துரைமுருகன் கேட்டார்.

இடைமறித்த சபாநாயகர் அப்பாவு -- அவங்களுக்கு கோட்ஸே தானே என்று கூறினார்.

They are Godse followers says Speaker Appavu in assembly during CM Stalins resolution against Governor RN Ravi?

உடனே அவை முழுக்க சிரிப்பலைகள் எழுந்தன. முதல்வர் ஸ்டாலினும் சிரித்தபடி ரியாக்சன் கொடுத்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய துரைமுருகன்,

நீங்க சொல்லிடீங்க தலைவரே.. நாங்க அதை சொல்ல முடியாது. இருக்கட்டும். அங்கே இருந்த போதே படத்தை காணோம் பாருங்கள் என்றேன். என் பக்கத்தில் இருந்த தலைவர்.. நம்முடைய படத்தையும் எதிர்காலத்தில் நீக்குவார்கள். யாருடைய அப்பன் வீட்டு படத்தை வைத்துக்கொண்டு.. நீ காந்தியின் படத்தை நீக்குகிறாய்.

நீ பாஜகவாக இருந்தால் அங்கே போய் சேர்ந்து கொள். மற்றபடி நீ கவர்னர் என்றால் கவர்னராக நடந்து கொள். அதை விட்டுவிட்டு கட்சிக்காரர் போல பேசலாமா? இது என்ன செயல் என்று துரைமுருகன் கடுமையாக பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+