'ஜெயலலிதாவிற்கு காட்ட வேண்டாம் என பயந்தார்கள்'.. படையப்பா குறித்து ரஜினிகாந்த் பகிர்ந்த வீடியோ
சென்னை: படையப்பா படத்தை எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் ஜெயலலிதாவை மையமாக வைத்துதான் நீலாம்பரி பாத்திரம் என புரளிகள் கிளம்பின. நான் ஏற்கனவே 1996ல் அவருக்கு எதிராக நான் பேசியிருந்தேன். படம் வெளியான பின்பு ஜெயலலிதா படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவருக்கு காட்ட வேண்டாம் என சிலர் பயந்தனர். ஆனால் இதில் என்ன இருக்கிறது. என ரீலை போயஸ் கார்டனுக்கு அனுப்பி வைத்தேன். ஜெயலலிதா படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக கூறினார் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
கடந்த 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் படையப்பா திரைப்படம் வெளியானது. இந்த படத்தில், ரஜினிகாந்த், மறைந்த நடிகை சௌந்தர்யா, மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வில்லியாக ரம்யா கிருஷ்ணன், நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, லட்சுமி, ராதாரவி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தில் அனைத்து பாடல்கள், காட்சி அமைப்புகள் மிகவும் பெயர் போனவை. ரஜினியின் திரைப்பட வரலாற்றில் முக்கியமான திரைப்படங்களில் படையப்பாவும் ஒன்று..

நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்த நாள் 12.12.2025 அன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அவரது நடிப்பில் வெளியான சிறந்த திரைப்படங்களில் ஒன்றான படையப்பா திரைப்படம் மீண்டும் வெளியாகிறது. இதையடுத்து படையப்பா படம் எப்படி எடுக்கப்பட்டது. நீலாம்பரி கேரக்டருக்கு எப்படி ரம்யா கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விவரித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோவும் ரஜினி தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில் படையப்பா படத்திற்கு ரம்யா கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்ட விதம் குறித்து கூறியதுடன், அந்த படத்தின் கதை பொன்னியின் செல்வன் நாவலில் உள்ள நந்தினி கேரக்டரின் பாதிப்பு என்று கூறினார். பலரை நீலாம்பரி கேரக்டருக்கு சோதித்து பார்த்தும் சரியாக வரவில்லை என்றும், இறுதியாக ரம்யா கிருஷ்ணன் தோற்றத்தை கூறி இயக்குனர் தன்னிடம் பேசினார் என்றும், அப்போது அரைமனதாக தான் சம்மதித்ததாகவும், ஆனால் மேக்கப் எல்லாம் போட்டு பார்த்த பின்னர் பொருத்தமாக வந்தது என்றும் கூறினார். படையப்பா படத்தை பொறுத்த வரை நீலாம்பரி கேடக்டர் வென்றால் மட்டுமே படம் ஓடும் என்பதால் மிகுந்த தேடலுக்கு பின்னரே ரம்யா கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார் என்றும் ரஜினி வீடியோவில் கூறியுள்ளார். ஐஸ்வர்யாராயை முதலில் தேர்வு செய்ததாகவும், ஆனால் இறுதியில் ரம்யா கிருஷ்ணன் பொருத்தமாக இருந்ததால் தேர்வு செய்யப்பட்டதாகவும் ரஜினிகாந்த் வீடியோவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
படையப்பா படம் குறித்த வதந்தி குறித்து ரஜினி கூறுகையில், "படையப்பா படத்தை எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் ஜெயலலிதாவை மையமாகவைத்துதான் நீலாம்பரி பாத்திரம் என புரளிகள் கிளம்பின. நான் ஏற்கனவே 1996ல் அவருக்கு எதிராக நான் பேசியிருந்தேன். படம் வெளியான பின்பு ஜெயலலிதா படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பினார். அப்போது கலைஞர் தான் முதலமைச்சர். அவர் பாராட்டினார். ஆனால் அவருக்கு காட்ட வேண்டாம் என சிலர் பயந்தனர். ஆனால் இதில் என்ன இருக்கிறது. என ரீலை போயஸ் கார்டனுக்கு அனுப்பி வைத்தேன். ஜெயலலிதா படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக கூறினார் என கேள்விப்பட்டேன்" என்றார்.
படையப்பா இரண்டாம் பாகம் வருமா என்ற கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் பலருக்கு உள்ளது.இதுபற்றியும் ரஜினிகாந்த் வீடியோவில் பேசியுள்ளார். அதில் "முதல் பாகத்திலேயே நீலாம்பரி கதாபாத்திரத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்திருந்தது. தற்போது எல்லாமே 2.0 என எடுக்கிறார்கள். அதேபோல் ஏன் படையப்பா 2 எடுக்கக் கூடாது எனத் தோன்றியது. நீலாம்பரி என்ற தலைப்பில் படையப்பா 2 படத்தை எடுக்க கதையை திட்டமிட்டு வருகிறோம். எல்லாம் சரியாக அமைந்தால், படம் நிச்சயமாக வரும். ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்" என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications