திருடப்போன வீட்டில் பிரிட்ஜை திறந்து.. அதை சாப்பிட்டதுதான் மாயம்.. ஒரே அசிங்கமா போச்சு குமாரு!
சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் திருடப்போன வீட்டில் மதுபோதையில் திருடன் அயர்ந்து தூங்கிய சம்பவத்தால் வசமாக மாட்டிக்கொண்டார்.
சென்னை: சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் திருடப்போன வீட்டில் மதுபோதையில் திருடன் அயர்ந்து தூங்கிய சம்பவத்தால் வசமாக மாட்டிக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.
திருடப்போன வீடுகளில் அண்மைக்காலங்களில் திருடர்கள் தூங்கிய சம்பவங்களை கேள்விப்பட்டிருப்போம். மதுபோதை அதிகமாகி அங்கேயே மயங்கி விழும் திருடர்கள், காலை கண் விழிப்பதே வீட்டு ஓனர்களின் முகத்தில் தான் என்ற நிலை ஏற்படுகிறது. மதுஅருந்திவிட்டு திருடவந்த பல திருடர்கள் மாட்டியதற்கு மது போதை மயக்கம் தான் காரணம் என்கிறார்கள்.
சரி விஷயத்திற்கு வருவோம்.. சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் அடுக்கு மாடி குடியிருப்பில் கார்த்திக் நரேன் என்பவர் வசித்து வருகிறார்கள் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் கார்த்திக் நரேன் தனது பெற்றோரை இதே அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் குடி வைத்தருக்கிறார்.

வீட்டு மாடி
கார்த்திக் நரேனின் தந்தை ரங்கநாத்தும் அவரது தாயாரும் காசிக்கு சென்றிருந்திருக்கிறார். நேற்று முன்தினம் இரவு அவர்கள் காசியில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்கு திரும்பி இருக்கிறார்கள் இதனால் கார்த்திக் நரேன் பெற்றோரின் வீட்டை திறந்து வைத்துவிட்டு மாடியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று இருக்கிறார்.

குறட்டை
நேற்று காலையில் ரங்கநாத்தும் அவரது மனைவியும் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அப்போது படுக்கை அறையில் அவர்கள் கண்ட காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படுக்கை அறையில் வாலிபர் ஒருவர் நன்றாக குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்திருக்கிறார். இதுபற்றி அறிந்ததும் அக்கம் பக்கத்தினரை அவர்கள் உதவிக்கு அழைத்து வந்தனர். அவர்கள் வந்து அந்த இளைஞரை தட்டி எழுப்பினர்.

பதுங்கினார்
அப்போது அந்த இளைஞர் மிகுந்த மது போதையில் காணப்பட்டார். உடனடியாக சுதாரித்த இவர் தப்பி ஓடினார். ஆனால் தப்பியோடிவர் இன்னொரு வீட்டுக்குள் பதுங்கி இருக்கிறார். அவரை அப்படியே உள்ளே வைத்து அடைத்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணை
அடையாறு போலீசார் விரைந்து சென்று போதை கொள்ளையனை மடக்கி பிடித்தனர். போலீஸ் விசாரணையில் அவர் பெயர் ஏழுமலை என்பதும் திண்ணாமலை மாவட்டம் கவுந்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. வில்லிவாக்கம் ஜி.கே.எம்.காலனியில் தங்கி இருந்து கட்டுமான பணிகளில் அவர் ஈடுபட்டு வருவதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

சிக்கியது எப்படி
எப்படி தூங்கினார். ஏழுமலை மது அருந்திவிட்டு திருட வந்திருக்கிறார். வந்த இடத்தில் பிரிட்ஜில் இருந்த சாக்லேட்களை திண்று உள்ளார். சாக்லேட் சாப்பிட்டதால் அவருக்கு போதை அதிகமாகி உள்ளது. இதனால் தான் திருட வந்த இடத்தில் மயங்கி உறங்கி உள்ளார். இந்நிலையில் ஏழுமலையிடம்
இருந்து ஆயிரம் ரூபாய் பணம் மற்றும், 20 யூரோ கரன்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஏழுமலைலையை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications