'எப்புட்றா' பாணி, சென்னை குரோம்பேட்டையில் 50 பவுன் தங்கத்தை லாக்கரோடு தூக்கிய திருடர்கள்.. ட்விஸ்ட்
சென்னை: சென்னை குரோம்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை மற்றும் 10 கிலோ வெள்ளி பொருட்களை 'லாக்கரோடு' தூக்கிச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னையில் சிசிடிவி இல்லாத பகுதிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு 3ம் கண் இருக்கிறது. சென்னையில் பல்வேறு சாலை சந்திப்புகளில் அதிநவீன கேமராக்கள் மாநகர போலீஸ் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர சென்னையில் பெரும்பாலான வீடுகள் சிசிடிவி கேமராக்கள் இருக்கின்றன.

திருடினால் மாட்டிக் கொள்வோம் என்பதை அறிந்தும், திருடர்கள் கைவரிசை காட்டுவது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிக்கடி நடக்கிறது. அதேநேரம் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்றால் குற்றாவளிகளை கண்டுபிடிப்பது சவாலான காரியமாகிவிடுகிறது.. சென்னை குரோம்பேட்டை அடுத்த சிட்லப்பாக்கத்தில் அப்படி ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.. இதை பற்றி பார்ப்போம்..
சென்னை குரோம்பேட்டையை அடுத்த சிட்லபாக்கத்தை சேர்ந்தவர் 67 வயதாகும் ரங்கராஜன். இவருடைய மனைவி பெயர் ஹேமலதா. இவர்களுக்கு ஆதித்யா என்ற மகன் உள்ளார். இவர்கள் அனைவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் சென்னை மயிலாப்பூரில் வசிக்கும் ரங்கராஜனின் தந்தைக்கு 100-வது பிறந்த நாள்கொண்டாட முடிவு செய்தனர். இதன்படி பிறந்த நாளை கொண்டாட வீட்டை பூட்டிவிட்டு ரங்கராஜன் குடும்பத்தினர் அனைவரும் மயிலாப்பூருக்கு சென்றுவிட்டார்கள்
இந்தநிலையில் ரங்கராஜன் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவருக்கு செல்போனில் அழைத்து கொடுத்தனர். அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது ரங்கராஜன் வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த சிறிய 'லாக்கரை' அலேக்காக தூக்கிச்சென்று இருந்தது தெரியவந்தது. ரங்கராஜன் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டிற்குள் சென்று கைவரிசை காட்டி உள்ளனர்.
கொள்ளையர்கள் திருடிச்சென்ற லாக்கரில் 50 பவுன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. பழைய 'லாக்கர்' என்பதால் அதன் பூட்டை கொள்ளையர்களால் உடைக்க முடியாமல் போயிருக்கிறது. இதனால் அப்படியே தூக்கிச்சென்று இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.. இதனிடையே தங்க நகைகள் திருடு போன சிட்லபாக்கம் ரங்கராஜன் வீட்டின் அருகே கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இதனால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் என்று அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சிட்லப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications