3 லட்சம் ரூபாய் பைக் சார்.. நொடியில் தூக்கிய திருடன்.. சென்னை ஆதம்பாக்கத்தை அதிர வைத்த சம்பவம்
சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் 3 லட்ச ரூபாய் மதிப்புடைய பைக்கை ஒரு சில நிமிடங்களில் சைடு லாக்கை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னையில் எவ்வளவு தான் சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும், திருடினால் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் பலர் திருடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களை திருடுவது அதிகமாக இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை பல பகுதிகளில் உள்ள வீடுகளில் வாகன நிறுத்தம் வசதிகள் இருக்காது. வீடுகளை ஒட்டிய சாலையோரங்களில் தான் தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தனியாக நிற்கும் பைக்குகளை நோட்டம் விடும் திருடர்கள், லாவமாக சைட்லாக்கை உடைத்து, அந்த பைக்கை எடுத்து கொண்டு சென்று வெளியூர்களில் உள்ள கிராமப்புறங்களில் அப்பாவிகளிடம் விற்றுவிடுகிறார்கள். அவர்கள் காடு, வயல் என, கிராமப்புறங்களில் மட்டுமே ஓட்டுவதால் திருடுபோன பைக்குகள் குறித்து எந்த தகவலும் அவர்களுக்கும் தெரிவது இல்லை. என்றாவது ஓரு நாள் போலீசிடம் சிக்கும் போது தான், அது திருட்டு பைக் என்பது அவர்களுக்கு தெரிய வருகிறது,.
பைக்குகளை பொறுத்தவரை திருடுபவர்கள் என்ஜினை தவிர எல்லா பொருட்களையும் பாதி விலைக்கு விற்கும் நிகழ்வுகளும் அடிக்கடி நடக்கிறது. சில நேரங்களில் இன்ஜினையும் பழைய வண்டிகளில் பொறுத்த வைத்து அதையும் விற்றுவிடுகிறார்கள். சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் திருடப்படுகிறது. இந்த கும்பல்கள் அவ்வப்போது தான் சிக்குகின்றன.
அப்படி சிக்கும் போது தான் அவர்களிடம் இருந்து மொத்தமாக பைக்குகளை போலீசார் கைப்பற்றி உரியவர்களிடம் ஒப்படைக்கிறார்கள். அதேநேரம் பெரிய அளவில் திருட்டுகள் நடைபெறும் போது , தனிப்படை அமைத்து போலீசார் திருடர்களை தேடி கண்டுபிடித்து வாகனங்களை மீட்கும் சம்பவங்களும் அடிக்கடி சென்னையில் நடக்கிறது.
இந்நிலையில் சென்னை ஆதம்பாக்கத்தில் 3 லட்ச ரூபாய் மதிப்புடைய பைக்கை வெறும் மூன்றே நிமிடத்தில் சைடு லாக்கை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சொகுசு பைக்குகளை குறிவைத்து திருடும் இந்த கும்பல்கைளை பிடித்து வாகனங்களை மீட்பதுடன், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications