Thirsty Crow- கதை கேட்டோமே நினைவிருக்கா?.. அது நிஜத்திலேயே நடந்திருக்கு!.. வைரலாகும் வீடியோ!!
சென்னை: காகம் ஒன்றும் ஒரு பானையில் கற்களை தூக்கி போட்டு தண்ணீரின் உயரத்தை அதிகரித்து தண்ணீர் அருந்தியதை கதையாக கேட்டுள்ளோம், ஆனால் நேரில் பார்த்துள்ளோமா என்றால் இல்லை. தற்போது இதுகுறித்த ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
சிறுவயதில் கதை கேட்பது என்றால் யாருக்குத்தான் பிடிக்காது, ராஜா ராணி கதைகள், விலங்குகளின் கதைகள், கோடாரி கதைகள், பேய் கதைகள், மாய கதைகள் என விதவிதமான கதைகளை பாட்டி, தாத்தாவிடம் கேட்டே நாம் வளர்ந்துள்ளோம்.
அந்த வகையில் காக்கா கதையை நாம் கேட்டுள்ளோம். ஒரு காக்கா தாகத்துடன் பறந்து பறந்து தண்ணீரை தேடுகிறது. அப்போது ஒரு மண் பானையில் தண்ணீர் இருக்கிறது. ஆனால் அந்த காகத்தால் குடிக்க முடியவில்லை.

கற்கள்
இதனால் காகத்திற்கு ஒரு ஐடியா உதித்தது. அதன் படி கற்களை மண்பானையின் உள்ளே போட்டு அதிக கற்கள் சேர்ந்த பின்னர் தண்ணீர் மேலே வர பின்னர் தனது தாகத்தை காகம் தீர்த்து கொள்ளும். அந்த காகமும் மகிழ்ச்சியாக செல்லும். இதைத்தான் சிறிய வகுப்புகளிலும் கதையாக சொல்லி மழலைகளின் வாயால் ஆசிரியர்கள் சொல்ல வைப்பர்.

கதை
இந்த கதையிலிருந்து நாம் விடாமுயற்சியையும் நமது லட்சியத்தையும் எந்த சோதனை வந்தாலும் விடக் கூடாது என்பதை கற்றுக் கொண்டோம். இது போல் கதைகளில் கேட்ட ஒரு விஷயம் தற்போது நிஜமாகவே நடந்துள்ளது. ஒரு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் இருக்கிறது.

காக்கை
அதன் வாய் சிறியதாக இருப்பதால் காக்கையால் குடிக்க முடியவில்லை. இதனால் சுற்றி சுற்றி பார்க்கும் அந்த காகம் கற்களை பாட்டிலில் போட்டு மூக்கை விட்டு பார்க்கிறது. அப்படியும் தண்ணீரின் அளவு ஏறாததால் மீண்டும் மீண்டும் சுற்றியுள்ள கற்களை பாட்டிலில் போட்டு தனது தாகத்தை தீர்த்துக் கொள்கிறது.
|
வீடியோ
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. புத்தக வடிவிலும் கதைகள் மூலமாகவும் கேட்டுள்ள இந்த கதையின் உண்மையான காணொலி ஒன்று கிடைத்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இந்த வீடியோவில் உள்ள காகம் கருப்பு, வெள்ளை நிறத்தில் உள்ளது. எனவே இது காக்கையா இல்லை வேறு ஏதேனும் பறவையா என தெரியவில்லை.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications