சுதந்திர தினத்தில் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும்.. பிரதமர் மோடிக்கு வைரமுத்து முக்கிய கோரிக்கை
சென்னை: நாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டிற்கான சுதந்திர உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து முக்கிய கோரிக்கை ஒன்று வைத்துள்ளார்.
தாய் திருநாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மக்களிடம் உரையாற்றவுள்ளார். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பிரதமர் உரையில் என்னென்ன விஷயங்கள் இடம்பெற வேண்டம் என்று பொதுமக்களின் கருத்துகளை பிரதமர் மோடி கேட்டுள்ளார். பொதுமக்கள் தங்கள் கருத்துகள் குறித்து பகிர பிரதமர் மோடி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பை சுதந்திர தினத்தன்று வெளியிட வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
"மாண்புமிகு
இந்தியப் பிரதமர் அவர்களே!
தங்களின்
விடுதலைத் திருநாள் பேருரைக்கு
மக்கள் கருத்துக்கு அழைப்புவிடுத்த
தங்கள் மாண்புக்கு
என் ஜனநாயக வணக்கம்
தமிழ்நாட்டிலிருந்து
ஓர் இந்தியனாக எழுதுகிறேன்
தாங்கள்
காலமெல்லாம் போற்றிவரும்
திருக்குறள்
இனம் மொழி மதம் நாடுகடந்த
உலகத்தின் அசைக்கமுடியாத
அறநூல்
மனிதம் என்ற
ஒற்றைக் குறிக்கோளை
உயர்த்திப் பிடிப்பது
அதனை
இந்தியாவின் தேசிய நூலாக
அறிவிக்க வேண்டும் என்பது
தமிழர்களின் நீண்ட கனவு
மற்றும்
நிறைவேறாத கோரிக்கை
இந்தியாவின்
79ஆம் விடுதலைத் திருநாள் பேருரையில்
திருக்குறள்
இந்தியாவின் தேசிய நூலாக
அறிவிக்கப்படும் என்ற நல்லறிவிப்பை
வெளியிட வேண்டுகிறோம்
தாங்கள்
கேட்டுக்கொண்ட வண்ணம்
நமோ செயலியிலும்
இதனைப் பதிவிடவிருக்கிறோம்
இது
உலகப் பண்பாட்டுக்கு
இந்தியா கொடுக்கும் கொடை
என்று கருதப்படும்;
ஆவனசெய்ய வேண்டுகிறோம்
ஆகஸ்ட் 15 அன்று
தொலைக்காட்சி முன்னால்
ஆவலோடு காத்திருப்போம். என்று தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications