அதிமுகவிற்கு போவதாக சொன்னாங்களே.. தவெக எப்படி? திருமா கேட்ட கேள்வி.. ஆதவ் அர்ஜுனா சொன்ன பதில்
சென்னை: விசிகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார் ஆதவ் அர்ஜுனா. கட்சியில் அவர் உட்பட பல புதிய நிர்வாகிகளுக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது.
தவெக.வில் இணைந்து பொறுப்பு பெற்ற கையோடு திருமாவளவனை சந்தித்து வாழ்த்துகள் பெற்றார் ஆதவ் அர்ஜுனா. இருவரும் 40 நிமிடங்கள் மனம் விட்டுப் பேசிக்கொண்டனர். அப்போது, அதிமுகவுடன் இணைந்து தேர்தல் வியூக பணிகளை முன்னெடுக்கப்போவதாகத்தான் எனக்குத் தகவல் கிடைத்தது. பிறகெப்படி, இந்த மனமாற்றம்? என்று திருமாவளவன் கேட்டிருக்கிறார்.

அதற்கு கடந்த 3 மாதங்களில் நடந்தவைகளை விவரித்திருக்கிறார் ஆதவ். குறிப்பாக வி.சி.க.வில் மீண்டும் இணைந்து அரசியல் செய்ய முடியுமா? என்ற கேள்வி எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. விஜய்யிடமிருந்து அழைப்பு வரும் என காத்திருந்த நிலையில், அவரிடமிருந்து அழைப்பு வராத நிலையில்தான், பிரசாந்த் கிஷோர் பேசினார்.
அதிமுகவிற்காக வொர்க் பண்ணுவதற்கு பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த சூழலில்தான், நம் நண்பர் ஒருவர் விஜய்யை சந்தித்தார். அதே நாளில் நண்பர் எனக்கு ஃபோன் செய்து விஜய்யிடம் ஃபோனைக் கொடுத்துவிட்டார். ஃபோனில் 5 நிமிடம் பேசினார் விஜய். அப்போது, நாளைக்கே என்னை வந்து சந்திக்கிறீர்கள் என அழுத்தமாகச் சொன்னார். சந்தித்தேன். அந்த சந்திப்பில்தான் நிறைய விசயங்களைத் தெளிவுப்படுத்தினேன்.
கட்சியில் இணைந்து தேர்தல் பணிகளை செய்யணும்னு விரும்புகிறேன் என வலியுறுத்தினார். தொடக்கத்தில், கட்சியில் நான் இணையவில்லை, தேர்தல் யுக்திகளை கவனித்துக் கொள்கிறேன் என்றுதான் சொன்னேன். அவர்தான், தேர்தல் வியூகத்துக்காக உங்க நிறுவனத்துடன் அக்ரிமெண்ட் போட்டுக்கொள்வோம். அது தனி விசயம். அந்த பணிகளை நீங்கள் மேற்பார்வையிடணும். அதற்கு கட்சியில் நீங்க இணையனும் என்று சொன்னார். அதனை ஏற்று இணைந்துவிட்டேன். உங்களைப் பற்றி விஜய் நிறைய விசாரித்தார் அண்ணே. அவரிடம் சொல்லி விட்டுத்தான் உங்களை சந்திக்க வந்தேன்'' என்று மனம் விட்டு பேசியிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.
கட்சியில் இணைந்த நிர்வாகிகள்:
ஆதவ் அர்ஜுனா மட்டுமன்றி அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் பிரபல பேச்சாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோருக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய பொறுப்புகளை நடிகர் விஜய் வழங்கி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இதுதவிர லயோலா மணி உள்பட இன்னும் பலருக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதுபற்றிய முழு விபரம் வருமாறு: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். தற்போது கட்சிக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றன. கட்சி சார்பில் மொத்தம் 120 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள் நியமனங்கள் நடந்து வருகிறது.
சங்கம்:
இது போக விரைவில் தமிழ்நாடு முழுக்க தொழிற்சங்கம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஆலோசனையும் நாளை செய்யப்பட உள்ளது. போக்குவரத்து கழகம் தொடங்கி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் வரை அனைத்து பிரிவிலும், துறையிலும் தொழிற்சங்கம் தொடங்க விஜய் முடிவு செய்துள்ளாராம்.
விக்கிரவாண்டியில் த.வெ.க.வின் முதல் மாநில மாநாட்டை நடத்தியப் பிறகு கட்சியின் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து எவ்வித ஆக்சனையும் எடுக்காமல் இருந்து வரும் விஜய், கடந்த வாரம் முக்கியமான ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்த ஆலோசனையின் முடிவில்தான் தொழிற்சங்கம் தொடங்க விஜய் முடிவு செய்துள்ளாராம்.
அதிமுக திமுகவிற்கு தொழிற்சங்கம் மூலம் நிறைய வாக்குகள் வருகின்றன. அதோடு சிபிஎம், சிபிஐ சங்கங்களின் வாக்குகளும் திமுக கூட்டணிக்கே செல்கிறது. இதை தன் பக்கம் கொண்டு வர பிரபல சங்கத்து நிர்வாகிகளிடம் பேசி தங்கள் சங்கத்திற்கு அழைத்து பெரிய அளவில் சங்கம் தொடங்க ஆலோசனை செய்து வருகிறாராம்.












Click it and Unblock the Notifications