சக மனிதனின் வாயில் மலத்தை திணிப்பது பைத்தியகாரத்தனத்தின் உச்சம்.. திருமாவளவன் ஆவேசம்!
சென்னை: சக மனிதனின் வாயில் மலத்தை திணிப்பது பைத்தியகாரத்தனத்தின் உச்சம் என விடுதலை சிறுத்தைகள் கட்சிதி தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி திலகவதி படுகொலை மற்றும் திருவாடுதுறை சாதிய வன்கொடுமையை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திலகவதி சாதி ஆணவப் படுகொலை குறித்து, சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தினார்.
அவர் மேலும் பேசியதாவது, திலகவதியின் குடும்பத்தினருக்கு அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். திருவாடுதுறை கொல்லிமலை சாதிய வன்கொடுமை குறித்து பேசிய அவர், சக மனிதனின் வாயில் மலத்தை திணிப்பது பைத்தியகாரத்தனத்தின் உச்சம் என கடுமையாக விமர்சித்தார்.
வேலூர் குச்சிபாளையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சாதி மோதல்களை தூண்டுவதாகவும் திருமாவளவன் குற்றம் சாட்டினார். கோட்சேவிற்கு ஆதரவாக மோடியின் பேச்சு இருப்பதாக கண்டனம் தெரிவித்த திருமாளவளவன், கமலுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
-
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
வெளிச்சம் டிவி என்னுடையது! விசிகவுக்கும் சேனலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! பனையூர் பாபு பரபரப்பு -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications