மதியம் 3 மணி முதல் அதிகாலை 1 மணி வரை நடந்த கூட்டம்! 10 மணி நேரம் என்ன ஆலோசித்தார் திருமாவளவன்!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது கட்சி நிர்வாகிகளுடன் 3 அமர்வுகளாக 10 மணி நேரம் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் அதிகாலை 1 மணிக்கு தான் நிறைவடைந்திருக்கிறது.
அப்படி என்ன அந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது, எதைப்பற்றி பேசப்பட்டது என்பது பற்றி நாம் விசாரித்ததில் பல புதிய தகவல்கள் கிடைத்தன.

விடுதலை சிறுத்தைகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியிருக்கிறது. இரண்டு மணி நேரம் அதிகபட்சம் 3 மணி நேரத்திற்குள் இந்தக் கூட்டம் நிறைவடைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 அமர்வுகளாக 10 மணி நேரம் ஆலோசனை நடைபெற்றிருக்கிறது. அதாவது வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி திருமாவளவனுக்கு மணி விழா வருவதால் அந்த விழாவுக்கு யார் யாரை அழைக்கலாம் என பெரிய டிஸ்கஷன் நடந்திருக்கிறது.

புதிய நிர்வாகிகள்
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் செயல்படாமல் இருக்கக் கூடிய நிர்வாகிகளுக்கு மாற்றாகவும், அதிகப் புகார்களில் சிக்கியவர்களுக்கு மாற்றாக புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வது பற்றியும் சீரியஸாக விவாதித்திருக்கிறார் திருமாவளவன். ஒன்றிய அளவில் தொடங்கி மாநில அளவில் வரை கட்சியின் அமைப்பு செயல்பாடுகள் பற்றி ஆழமாக ஆலோசனை நடத்தியிருக்கிறார் திருமாவளவன்.

பலரும் கருத்து
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை திருமாவளவனிடம் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். அதனை உன்னிப்பாக கவனித்து அதன் மீது விவாதம் நடத்தி சில முக்கிய முடிவுகளை திருமாவளவன் எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே திருமாவளவன் மணிவிழாவை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள விசிக நிர்வாகிகள் அது பற்றியும் விரிவாக பேசியிருக்கிறார்கள்.

தேசியத் தலைவர்கள்
தேசியத் தலைவர்கள் பலரை அந்த விழாவுக்கு அழைத்து அதனை மிகப்பெரிய அரசியல் மாநாடு போல் நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. திருமாவளவன் மணி விழாவை தமிழகம் முழுவதும் விசிகவினர் ஆகஸ்ட் மாதம் முழுவதும் கொண்டாடும் வகையில் செயல் திட்டங்கள் வகுக்கப்படவுள்ளன.
-
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
தவெக ஆட்சியில்.. ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா? வன்னி அரசு விளக்கம்! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்!












Click it and Unblock the Notifications